உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஜெயிஷ் அமைப்பின் கமாண்டர்

ஜம்முவில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஜெயிஷ் அமைப்பின் கமாண்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கதுவா : ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டது ஜெயிஷ் - இ - முஹமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ரிஹான் என்பது தெரிய வந்த நிலையில், அவரிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும், 'சாட்டிலைட் போன்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நாட்டின் பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்ற கடந்த 9ம் தேதி, ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சுற்றுலா பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அருகில் இருந்த பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது. ஒன்பது பேர் பலியாகினர். அடுத்த இரு தினங்களில் கதுவா, தோடா மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளிலும், ராணுவ முகாம்களிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களில் துணை ராணுவப் படை வீரர் உட்பட இருவர் பலியாகினர். பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெயிஷ் - இ - முஹமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் ரிஹான் என்றும் மற்றொருவர் அவரின் உதவியாளர் என்றும் தெரிய வந்துள்ளது.அவர்களிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மைக்ரோ செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கும் என உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 9ம் தேதி பஸ் மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்த ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் பேச்சு நடத்திய ஜெயிஷ் - இ - முஹமது பயங்கரவாதிகள், நாட்டில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.ரஜோரி மாவட்டத்தில் மேலும் இரு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பூஞ்ச் ​​மற்றும் ரஜோரி மாவட்டங்களில் இரண்டு ஆண்டுகளாக பயங்கரவாத செயல்கள் அதிகரித்துள்ள சூழலில், மேலும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் முழுதும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shakti
ஜூன் 15, 2024 13:49

தீவிரவாதிக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு ??


Rajamohan.V
ஜூன் 15, 2024 10:57

பயங்கரவாதிகளின் இறந்த உடலை அவர்கது ஆதரவளர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ ஒப்படைக்கக்கூடாது.


Anand
ஜூன் 15, 2024 10:47

இந்த விஷயத்தில் இஸ்ரேல் செய்வது சரியான நடவடிக்கை தான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை