உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காரில் ஏச ி போட்டு தூங்கியவர் பலி 

காரில் ஏச ி போட்டு தூங்கியவர் பலி 

உடுப்பி: கார் கதவுகளை பூட்டிவிட்டு 'ஏசி' போட்டு துாங்கியவர், மூச்சுத் திணறி உயிரிழந்தார்.சிக்கமகளூரு மாவட்டம், கடூரை சேர்ந்தவர் குருராஜ், 32. தனியார் நிறுவன ஊழியர். இவரது தந்தைக்கு சில தினங்களாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.இதனால் உடுப்பி டவுன் மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தந்தையை குருராஜ் நேற்று முன்தினம் மாலை காரில் அழைத்துச் சென்றார். குருராஜின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவில் குருராஜ் தங்குவதற்கு, மருத்துவமனை நிர்வாகம் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.வாகன நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திய குருராஜ், காரின் கதவுகளை மூடிவிட்டு, 'ஏசி' போட்டுத் துாங்கினார். நேற்று காலை அவர் எழுந்திருக்கவில்லை. அங்கு வந்த உடுப்பி போலீசார் கார் கண்ணாடியை உடைத்தனர்.காருக்குள் உடல் அசைவின்றி குருராஜ் கிடந்தார். அவரை பரிசோதித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ