மேலும் செய்திகள்
வக்ப் சொத்துகள் பதிவு; உ.பி., மாநிலம் முதலிடம்
1 hour(s) ago
நாட்டின் இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ.,வும், காங்கிரசும் நாட்டை ஆள துடிக்கின்றன. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில், கர்நாடகாவின் மாநில கட்சியான ம.ஜ.த., இடம் பிடித்து உள்ளது.கோலார் தொகுதியில் போட்டியிடும் ம.ஜ.த.,வை ஆதரிக்க, சில, 'லெட்டர் பேடு' கட்சிகள் முன்வந்துள்ளன. 2019 லோக்சபா தேர்தலின் போது, கடைசி கட்டத்தில், பட்டுவாடா செய்ய ஒரு சில மணி நேரத்திற்குள் பணம் கொண்டு வருவதாக குறிப்பிட்ட கட்சி தலைமையிடம் சொல்லி விட்டு, காங்கிரசார் சென்றனர். விடிய, விடிய...
பல லட்சம் ரூபாய் வரும் என, பல மணி நேரம் கதவை திறந்து வைத்து கொண்டு, அக்கட்சி தலைமை காத்திருந்தது. நள்ளிரவு முடிந்து, விடியற்காலையும் பிறந்தது. கதவை திறந்து வைத்து காத்திருந்த அந்த கட்சி ஏமாற்றம் அடைந்தது.இதனால், கோபம் அடைந்த அந்த கட்சி, தன் தொண்டர்களிடம், 'நோட்டா'வுக்கு ஓட்டு போடுமாறு, அறிவித்தது. இதன்படி 3,000 ஓட்டுகள் நோட்டாவில் பதிவானது.கோபத்தில் இருந்த அந்த கட்சி தலைமை, அடுத்த தேர்தலில் நம்மை நாடி வரத்தான் போகின்றனர். அப்போது பார்த்து கொள்ளலாம் என காத்திருந்தது. ஆனால், கடந்த முறை ஏமாற்றியவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ இம்முறை காங்கிரசில் சீட் கிடைக்காமல் போனது. இதனால், அவர்கள் இவர்களை தேடி வரவில்லை. தொகை வருமா?
இதனால், நடப்பு தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.ஜ.த.,வுக்கு ஆதரவளிக்க அக்கட்சி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. அதே நேரம், 'தொகை' வந்தால் தான் பேச்சுக்கே இடம் என்று உறுதியாக கூறி உள்ளனராம். கடந்த 2014ல், கோலார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த., வேட்பாளர் கேசவா என்பவர், இதே கட்சிக்கு 5 லட்சம் ரூபாயிலான காசோலை ஒன்றை வழங்கினார். ஆனால், காசோலை பணம் இல்லாமல், 'ரிட்டர்ன்' ஆகி விட்டது. நீதிமன்றத்தில் வழக்கும் பதிவானது. இப்படி, ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும், அந்த கட்சி தொடர்ந்து ஏமாற்றத்தையே சந்திக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் செலவழித்த தொகையை, இந்த லோக்சபா தேர்தலில் வசூலித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அதன் தலைமை உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.'எங்களிடம் 30,000 ஓட்டுகள் உள்ளன. வேண்டுமென்றால் பணத்துடன் வாருங்கள்' என கதவை திறந்து வைத்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த கட்சியும், தேசிய கட்சி வரிசையில் உள்ளதாக சொல்லப்படுகிறது- நமது நிருபர் -.
1 hour(s) ago