உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யோசித்து ஓட்டு போடுங்கள்: பிரியங்கா அட்வைஸ்

யோசித்து ஓட்டு போடுங்கள்: பிரியங்கா அட்வைஸ்

தாவணகெரே: ''இந்த நாடு, வளம் உங்களுடையது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் வளம், வாக்குறுதி திட்டங்கள் மூலம் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வாழ்க்கை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து ஓட்டு போடுங்கள்,'' என காங்., தேசிய பொதுச்செயலர் பிரியங்கா கேட்டு கொண்டார்.தாவணகெரே லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில், தோட்டக்கலை துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் மனைவி, பிரபா மல்லிகார்ஜுன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.இதில், காங்., தேசிய பொதுச்செயலர் பிரியங்கா பேசியதாவது:நுாற்றுக்கணக்கான மகளிர் மீது பலாத்காரம் செய்த நபரின் கையை பிடித்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். பலாத்காரம் விஷயம் பகிரங்கமானதும், அந்த நபர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

நடிப்பு

எந்த அரசியல்வாதி எங்கு செல்வார் என்று அறியும் மோடிக்கு, பலாத்கார நபர் நாட்டை விட்டு வெளியேறியது தெரியாதது போல் நடிக்கிறார். மகளிரை பாதுகாக்க வேண்டும் என்று கூறும் அவர், பலாத்கார நபருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், எப்போதுமே மகளிர், விவசாயிகள், தொழிலாளர்கள், வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை.தேர்தல் நேரத்தில், இரண்டு மாநிலங்களின் முதல்வர்களை சிறையில் அடைத்துள்ளார். பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், எத்தனை பள்ளி, கல்லுாரிகள் திறந்தார், எத்தனை சாலைகள் போட்டார், எத்தனை மருத்துமனைகள் கட்டினார் என்று மக்களுக்கு சொல்லவில்லை.தற்போது புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது. இந்த நாடு உங்களுடையது; இந்த வளம் உங்களுடையது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், உங்கள் வளம், வாக்குறுதி திட்டங்கள் மூலம் உங்களுக்கு வழங்கப்படும்.

நிறைவேற்றம்

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளமாக வைப்பதற்கும், இம்முறை யோசித்து ஓட்டு போடுங்கள். கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, கொடுத்த வாக்குறுதிப்படி, ஐந்து வாக்குறுதிகளும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்பட்டன.பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்கின்றனர். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. படித்து வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அன்னபாக்யா திட்டத்தால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
மே 05, 2024 17:02

மக்கள் மட்டும் யோசிச்சா உங்களுக்கு ஒட்டு போடுவாங்களா


Vijay D Ratnam
மே 05, 2024 15:11

மக்களுக்குஞாபகத்துக்கு வந்தா கான்,க்ராஸ் வாஷ் அவுட் ஆயுடும்க்கா


Ramesh Sargam
மே 05, 2024 12:35

யோசிக்காமலேயே பாஜகவுக்கு வோட்டு போடுங்கள் எல்லாம் சிறப்பாக நடக்கும்


கொங்கு மக்கள்
மே 05, 2024 11:37

மக்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர் ஓட்டு 60 ஆண்டு கால ஊழல் கட்சிக்கு இல்லை என்று.


ganapathy
மே 05, 2024 11:33

பல்லாயிரக்கணக்கான மக்களை கொலை செய்த போபால் விஷவாயு புகழ் யூனியன் கார்பைடு மொதலாளி வாரன் ஆண்டர்சன் தப்பி உதவியது காந்திபெயரில் உலவும் கயவர் குடும்பம் என்பதை யாரும் மறக்கவில்லை


Duruvesan
மே 05, 2024 13:00

லக்ஸ கணக்கான தொப்புள் கொடி உறவுகள் கொல்ல பட்ட போது ஆதரவு அளித்து மௌனம் காத்த தீயமுக காங்கிரஸ் கட்சிகளை கொண்டாடும் தமிழர்கள் இப்போது பிரியங்கா சொல்வதை கேலி செய்வது வேடிக்கை


chennai sivakumar
மே 05, 2024 10:49

மோடி அவர்கள் தப்பிக்க உதவினார் என்று கூறுபவர்க்கு போபால் விஷ வாயு கசிவில் மாண்டவர்கள் மறந்து விட்டதா?? அல்லது யூனியன் கார்பைடு chairman இரவோடு இரவாக தப்பிக்க வைத்தது காங்கிரஸ் என்பதும் மறந்து விட்டதா??


V RAMASWAMY
மே 05, 2024 08:56

நன்கு சொன்னார் பிரியங்கா மக்கள் ஏற்கனவே யோசித்து விட்டார்கள், இருந்தாலும் இவர் சொன்னபின் மறுபடியும் யோசித்து இந்த அழிந்து போய்க்கொண்டிருக்கும் காங்கிரசை இடம் தெரியாமல் செய்துவிட முடிவு கட்டிவிடுவார்கள்


shyamnats
மே 05, 2024 08:46

சந்தேகமே வேண்டாம், கான்கிராஸிற்கு ஓட்டு போடணுமா என்று மக்கள் பலமுறை யோசிப்பார்கள் அவ்வாறு யோசித்ததால் தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கட்சிக்கு கிடைக்க வில்லை


ramani
மே 05, 2024 07:14

தேச விரோத கட்சிக்கு காங்கிரஸ் ஹிந்து விரோத கட்சிக்கு காங்கிரஸ் ஓட்டு போடணுமா என்று யோசித்து பார்த்து ஓட்டு போடுங்க என்று அம்மணி சொல்லுது அதாவது தேச பக்தி இருக்கும் பாஜகவிற்கு ஓட்டு போடுங்க என்று சொல்லாமல் சொல்லுது


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ