உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு

எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: 'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்து, முஸ்லிம் கலவரங்கள் நின்றுவிட்டது. நீங்கள் தவறுதலாக எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் அந்தக் கலவரங்கள் துவங்கும்' என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். பீஹார் மாநிலம் ஜமுய் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது: மத்தியில் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அவர் பீஹாருக்காகவும், நாட்டிற்காகவும் எவ்வளவோ பணிகளைச் செய்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்து, முஸ்லிம் கலவரங்கள் நின்றுவிட்டன. நீங்கள் தவறுதலாக எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் அந்தக் கலவரங்கள் துவங்கும். கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி வழங்கினார். இதை மக்கள் மறக்க மாட்டார்கள். நாங்கள் தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து வேலை செய்த வேகம் அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சோழநாடன்
ஏப் 04, 2024 18:28

நம்புறமாதிரி நிதிஷ்குமார் பேச்சு இல்லையே


ramesh
ஏப் 04, 2024 18:02

இந்தியா கூட்டணியை சேர்ந்து ஆரம்பித்து விட்டு ஓடி போய் மீண்டும் மோடிக்கு காவடி தூக்கிய நிதிஷ் தானே இவர் இந்தியா கூட்டணியில் தலைமை பதவிகொடுக்காததால் மோடி இடம் ஓடிப்போய் இந்தியா கூட்டணியை பார்த்து ஊளை இடுகிறார்...


கனோஜ் ஆங்ரே
ஏப் 04, 2024 17:06

கொடுத்த காசுக்கு மேலே கூவுறாங்க


Naagarazan Ramaswamy
ஏப் 04, 2024 17:03

கர்நாடகாவில் கூட காங்கிரஸ் ஆட்ச்சிக்கு வந்தபின்னர் கொலைகள் குற்றங்கள் அதிகம் ஆகிவிட்டன அவர் சொல்வது நிஜமே நிஜம்


Kasimani Baskaran
ஏப் 04, 2024 16:53

வச்சாரே வேட்டு இந்திக்கூட்டணிக்கு


Justin Jose
ஏப் 04, 2024 16:00

இவர்கள்தான் கலவரம் செய்துள்ளார்கள் ஆட்சிக்கு வருவதற்காக தோல்வியுற்றால் இன்னும் கலவரம் செய்வோம் என்று குறிப்பாக சொல்கிறார்


Indian
ஏப் 04, 2024 15:50

பீஹாரிகளிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் காலை வாரி விடுவர்


Indian
ஏப் 04, 2024 15:19

ஏதவது தமிழ் நாட்டு செய்தியை போடுங்க


தமிழ்வேள்
ஏப் 04, 2024 15:09

மிக சரியான கணிப்பு தனது பதவி வெறிக்காக பாரதத்தை கூறு போட்ட காங்கிரஸ் கும்பல் எந்த விதமான பாதகத்தை வேண்டுமானாலும் செய்யும் இண்டி கும்பலுக்கு ஓட்டுபோடுவதும் , தற்கொலை செய்துகொள்வதும் ஒன்றே


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி