| ADDED : மே 30, 2024 01:56 AM
பெங்களூரு: ஒன்பதாம் வகுப்பு சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக 'மார்பிங்' செய்து வெளியிட்ட இரு சிறுவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்த நபர், அதை 'மார்பிங்' செய்து ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் போலிக் கணக்கு துவக்கி, பதிவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, வடகிழக்கு 'சைபர் கிரைம்' போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், பள்ளியில் படிக்கும் இரு சிறுவர்கள், பி.யு., கல்லுாரி மாணவர் ஜீவன் குமார், 18, ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அவர்களிடம் நடத்திய விசாரணையில், 'சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை இளம்பெண்கள், மாணவியர் பதிவிடுகின்றனர். அதை பதிவிறக்கம் செய்து, 'மார்பிங்' செய்து ஆபாசமாக சித்தரித்து, மீண்டும் சமூக வலைதளத்தில் போலியான பெயரில் கணக்கை துவக்கி, பதிவேற்றம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.இரு சிறுவர்கள், சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கும், கல்லுாரி மாணவர் நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.'தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன் வழங்கும் பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது' என, போலீசார் எச்சரித்தனர்.