பெங்களூரு சிவாஜிநகர் திம்மையா சாலையில், பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, கோவிலில் முதல் முறையாக 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையை கோவில் 'டிரஸ்டிகள் ஆர்பிவிஜிசிசி' நிர்வாகத்துடன் தினமலர், ஸ்ரீராமபுரம் சுதா புக் சென்டர் இணைந்து நடத்தினர்திருவிளக்கு பூஜைக்காக நேற்று காலையில் இருந்து, ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. நிர்வாக டிரஸ்டி மோகன், டிரஸ்டிகள் டாக்டர் குமார், ரகுநந்தன், வாசுதேவன், சாய்பிரசாத் ஆகியோரும் இவர்களின் மனைவியான மஹாலட்சுமி, லதா, சிந்து, தீபா, பிரியா ஆகியோர் ஏற்பாடுகளை முன்நின்று செய்தனர். தமிழ் வேத பாராயணம்
கோவில் வளாகத்திற்குள் நீண்ட வரிசையில் மேஜைகள் போடப்பட்டு, விளக்கு, பூஜை பொருட்கள் வைக்கப்பட்டன. சரியாக மாலை 4:35 மணிக்கு குருவந்தனம் எனும் பெரியவர்களுக்கு வணக்கம் சொல்வதன் மூலம், திருவிளக்கு பூஜை துவங்கியது. குருக்கள் பிரகாஷ் சிவாச்சார்யார், திருவிளக்கு பூஜையை நடத்தினர். கணபதி பூஜை மஹா சங்கல்பம், விளக்கில் அன்னையை ஆவாஹனம் (எழுந்தருள செய்தல்), 1,008 நாமாவளிகள் - லலிதா சகஸ்ரநாமம், அம்மனுக்கு தீபம், நைவேத்தியத்தியத்துடன் மந்திர புஷ்பம், சோஷ்திர பாராயணம், தமிழ் வேத பாராயணம் செய்யப்பட்டு, மஹா தீபத்திற்கு மஹா தீபாராதனை நடந்தது.விளக்கிற்கு எப்படி எல்லாம் பூஜை செய்ய வேண்டும் என்று, பிரகாஷ் சிவாச்சார்யார் எடுத்து கூறினார். அதனை பின்பற்றி பெண்கள் திருவிளக்கிற்கு பூஜை செய்து வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட, அனைத்து பெண்களின் முகத்திலும் உற்சாகம் பொங்கி வழிந்தது. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று, மனதார வேண்டி கொண்டனர். பித்து என்றால் கருணை
பூஜை முடிந்த பின்னர் கோவிலின் குருக்கள் பாலசந்திர சிவாச்சார்யார் அருளுரையில் கூறியதாவது:திருவிளக்கு பூஜையில் பங்கேற்று இருக்கும், உங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும். அம்மா என்றால் அன்பு. அம்மாவுக்கு தான் இப்போது பூஜை செய்து உள்ளோம்.குழந்தைகள் என்ன தவறு செய்தாலும், தாய் மன்னித்து விடுவார். அதுபோல உங்கள் அனைவரையும் அம்மன் அரவணைப்பார். நீங்கள் அனைவரும் வீட்டில் தினமும் பக்தி பாடல்கள் பாராயணம் செய்ய வேண்டும். 'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்' என்பர். பித்து என்ற வார்த்தைக்கு கருணை என்று பொருள். அம்மனுக்கு மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி என்று பெயர். விசாலாட்சி என்பது பரந்த கண். எங்கு இருந்தாலும் உங்களுக்கு ஆசி கிடைக்கும். உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், திருவிளக்கு பூஜையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள், இப்போது செய்யும் பூஜையால், உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம் கிடைக்கும். தினமலருக்கு பாராட்டு
கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்த வேண்டும் என்று, தினமலர் நிர்வாகத்தினர் ரொம்ப நாட்களாக கேட்டு வந்தனர். நடத்த முடியுமா என்று பயம் இருந்தது. ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். முதலில் 51 விளக்கு வைத்து பூஜை செய்தால் போதும் என்று நினைத்தோம். நாட்கள் செல்ல, செல்ல, பூஜையில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. நிறைவில் 113 பேர் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையை வெற்றிகரமாக நடத்தி கொடுத்த, தினமலர் நிர்வாகத்துக்கு நன்றி.வாரம்தோறும் தினமலர் நாளிதழில், செவ்வாய்கிழமை தோறும் ஆன்மிக பக்கம் வெளியாகிறது. நமக்கே தெரியாத கோவில்களை பற்றி வரலாறு எழுதுகின்றனர். ஆடி வெள்ளிக்கு ஒரு பக்க சாமி படங்கள் வெளியாகி வருகிறது. இதற்கு பெரிய முயற்சி தேவை. அவர்களுக்கு நாமும் உறுதுணையாக இருக்க வேண்டும். அனைவரும் 'தினமலர்' நாளிதழ் வாங்குங்கள். தமிழ் படிக்க தெரியாவிட்டாலும், சாமியின் புகைப்படங்களையாவது பார்க்கலாம்.இவ்வாறு அவர் பேசினார். காசி விசாலாட்சி புகைப்படம்
பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் 'தினமலர்' பெயர் பொறித்த காசி விசாலாட்சி புகைப்படம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விளக்கில் இருந்த எண்ணெய், திரி பெரிய விளக்கில் சேர்க்கப்பட்டது. அம்மன் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்ட, எலுமிச்சை பழம்வழங்கப்பட்டது.பக்தைகள் பூஜை செய்த விளக்கு, அவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மகிழச்சியுடன் தங்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.=======புல் அவுட்முதல்முறை எங்கள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடத்தி உள்ளோம். மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. தினமலர் நிர்வாகத்திற்கு நன்றி. பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடவுளின் அருள் கிடைக்கட்டும்.மஹாலட்சுமி, நிர்வாக டிரஸ்டி மோகன் மனைவி.நாங்கள் எதிர்பார்த்ததை விட நிறைய பேர், பூஜையில் கலந்து கொண்டனர். எல்லாருக்கும் கடவுள் அருள் கிடைத்து இருக்கும். பூஜையை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்துவோம் என்று நம்பிக்கை உள்ளது.தீபா, டிரஸ்டி சாய்பிரசாத் மனைவி.========திருவிளக்கு பூஜை ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. பூஜையில் பங்கேற்றது மனதிற்கு நிறைவு. முதல்முறை என்றாலும் சிறப்பாக செய்து உள்ளனர். பூஜைக்கு வந்தவர்களுக்குள் அம்மன் ஆசி கிடைக்கும்.கல்பனா, தண்டு மாரியம்மன் கோவில் அர்ச்சகர் நாகேந்திர பிரசாத் மனைவி.=====திருவிளக்கு பூஜையில் பங்கேற்றது மனதிற்கு திருப்தியாக உள்ளது. மனநிறைவுடன் வீட்டிற்கு செல்கிறேன். பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும், அம்மன் அருள் கிடைத்து இருக்கும். எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்.லட்சுமி சுவாமிநாதன், சிவாஜிநகர்.======================திருவிளக்கு பூஜையில் எனது மகள் கலந்து கொண்டார். முதல்முறையாக இருந்தாலும் ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. விளக்கிற்கு எண்ணெய் காலியாவதற்குள் வந்து கொடுத்தனர். சாமியின் புகைப்படம் கிடைத்தது மகிழ்ச்சி.சத்யகுமார், சிவாஜிநகர்.=========பாக்ஸ்தினமலரை பார்த்து வந்தோம்எங்கள் சொந்த ஊர் தமிழகம் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் கிருஷ்ணாபுரம். தற்போது சிக்பேட்டில் வசிக்கிறோம். பல ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் படிக்கிறேன். நாளிதழில் இன்று வெளியான, 'இன்று இனிதாக' செய்தியில் கோவிலில் திருவிளக்கு பூஜை நடப்பதாக இருந்தது. அதை பார்த்து கோவிலுக்கு வந்தோம். பூஜையில் எனது மனைவி, மூன்று மகள்கள் கலந்து கொண்டனர். குமரேசன், சிக்பேட். - நமது நிருபர் -