உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலச்சரிவு குறித்து மத்திய அமைச்சர் பொய் குற்றச்சாட்டு: கேரள முதல்வர்

நிலச்சரிவு குறித்து மத்திய அமைச்சர் பொய் குற்றச்சாட்டு: கேரள முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவுக்கு மலைப்பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகள் மற்றும் சுரங்கங்களை அனுமதித்ததே காரணம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'கேரளாவின் வயநாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு உடைய பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகள், சுரங்கங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அங்கு உள்ள மண் பரப்பு, தாவர அமைப்பு போன்ற முக்கிய சுற்றுச்சூழல் காரணிகளை அலட்சியம் செய்து, மனித வாழ்விடங்களை அனுமதித்ததே பேரழிவுக்கு வழிவகுத்தது' என்றார். இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. கேரளாவின் மலைப் பகுதியைப் பற்றி சிறிதளவு அறிவும், புரிதலும் உள்ளவர்கள் கூட அங்கு வசிக்கும் மக்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூற மாட்டார்கள். கேரள அரசுக்கு எதிராக விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்களை திரட்ட மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் செய்திகள், இவரது அறிக்கையின் வாயிலாக உண்மை தான் என்பது உறுதியாகிறது,” என்றார்.

கனமழை கணிப்பு: வானிலை மையம் தகவல்

'கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு முன்னதாக, இந்திய வானியை ஆய்வு மையம் கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் மட்டுமே விடுத்திருந்தது. ஆனால், எச்சரித்ததை விட மிக அதிகமாக வயநாட்டில் 57 செ.மீ., மழை பெய்தது' என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கனமழை முன்னெச்சரிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 30 - 40 சதவீதம் மேம்பட்டுள்ளது. அடுத்த ஐந்து முதல் ஏழாண்டுகளில், மேலும் 10 - 15 சதவீதம் மேம்படுத்தப்படும்.தற்போதைய நிலவரப்படி, 24 மணி நேரத்திற்கு முன்னதாக கடும் மழைப் பொழிவை 80 முதல் 90 சதவீதம் வரையிலும் துல்லியமாக கணிக்கிறோம். ஐந்து நாட்களுக்கு முன் 60 சதவீதம் வரையிலும் துல்லிய கணிப்பை வழங்குகிறோம். இதை பயன்படுத்தி, கனமழை காலங்களில் பெருத்த உயிர் மற்றும் பொருள் சேதங்களை முடிந்தவரை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.பலவீனமான மலைப் பகுதிகளில் சுரங்கங்கள் தோண்டியதும், வனப்பகுதிகள் குறைந்து வருவதும், நீண்ட நேர மழை பொழிவுமே வயநாடு நிலச்சரிவுக்கு முக்கிய காரணங்களாக விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ராமகிருஷ்ணன்
ஆக 07, 2024 13:56

இந்திய அளவில் எந்த கம்யூனிஸ்டும் உண்மையை பேசியதில்லை.


Ramesh Sargam
ஆக 07, 2024 12:56

இந்த நேரத்தில் இப்படி அசிங்க அரசியல் பேசுவதை இவர் தவிர்க்கவேண்டும். இதுவரை இவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரண நடவடிக்கைகளை கண்காணித்தாரா...? ஒரு செய்தியும் இல்லை. மேலும் பலர் கொடுக்கும் நிவாரண பணத்தை என்ன செய்கிறார்?


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:54

ஒரு உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரிக்கலாம்


M Ramachandran
ஆக 07, 2024 11:28

மத்திய மைச்சர்கள் யோசித்து பொது இடத்தில் பேசுபவர்கள் தீ மு க்கா மற்றும் உங்கள் கலாச்சாரம் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் கம்யூனிச ஆட்சியில் சபரி மலை நடந்து செல்லும் ஏரி மேலி முதல் அழுதை ஆறு வரை காட்டை அழித்து கம்யூனிஸ்டுக்களை குடி ஏற வைத்து கேரள வாட்டர் போர்ட்டை வைத்து பல கிணறுகள் தோண்டி குட்டி அமர்த்தியதுமல்லாமல் ஐய்யப்பன் மார்கள் நடை வழி செல்லும் வழியில் பல கள்ளுக்கடைகளை திறந்து உங்கள் புத்தியை காட்டி உள்ளிர்கள். அதன் பலன் இப்போதும் சென்ற ஆண்டும் இயற்கை அதன் வலிமைய காட்டி உள்ளது. வானம் அதாவது காடுகள் மிருகங்களுக்கு வாழ் வலி செய்துள்ளன அது மாட்டு மல்லாது இயற்கை பருவ காலமழை பெய்து நாடு சுபிட்சமாக இருக்கும்.


Mettai* Tamil
ஆக 07, 2024 11:25

வயநாட்டில் வன அழிப்பே, நிலச்சரிவுக்கு ஒரு முக்கியமான காரணம்


k Venkatesan
ஆக 07, 2024 11:01

எதிர்காலத்தில் வானிலை மையம், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை கொடுப்பதுபோல் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். உண்மையில் கனமழை பெய்து வெள்ள பெருக்கு ஏற்படுமானால், ஓரளவாவது பொதுமக்கள் பத்திரமான இடத்தில தஞ்சம் புகுவர்


venugopal s
ஆக 07, 2024 10:18

மத்திய பாஜக அரசு என்ன சொன்னாலும் உண்மை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் என்ன சொன்னாலும் பொய், தவறு என்று நம்புவதற்கு ஒரு பெரிய மூடர் கூட்டம் இருக்கும் வரை பாஜகவின் காட்டில் மழை தான்!


hari
ஆக 07, 2024 10:56

உண்மை 200 ரூபாய் கொடுத்தால் பாக்கிஸ்தானுக்கே முட்டு கொடுப்பார் போல...


Mettai* Tamil
ஆக 07, 2024 12:05

பாஜகவின் காட்டில் மழை தான் வயநாடு காட்டில் தான் மழை ...நிலச்சரிவுக்கு முக்கியமான காரணம் மரங்களை வெட்டி கட்டிடம் கட்டியது தான். உண்மையை ஒத்துக்கொள்ளுங்க ......


vbs manian
ஆக 07, 2024 09:11

வயநாட்டில் வெட்டப்பட்டு கடத்தப்பட்ட மரங்களை கேளுங்கள். உண்மை சொல்லும்.


Sivagiri
ஆக 07, 2024 08:53

இது , நம்ம துரை-அய்யா சொல்லிக் கொடுத்தாராக்கும் ?


GMM
ஆக 07, 2024 08:14

கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு உதவி புரியாமல் இணையாக ஆட்சி நடத்தி வருகின்றன. மத்திய அமைச்சர் பொய் குற்றச்சாட்டு என்றால், ஆண்டு வாரியாக அங்குள்ள குடியிருப்புகள், வாக்காளர் பதிவு, சுரங்க அனுமதி விவரம் வெளியிட்டு பின் விஜயன் அறிக்கை விட வேண்டும். மாநில கட்சிக்கு வாக்கு வங்கி முக்கியம். ராகுல் வயநாட்டு MP இன்று எதிர்க்கட்சி தலைவர். சுற்றுலாவினால் குடியேற்றம், விடுதிகள் அதிகரித்து இருக்கும். ஓகேணக்கல் ஒரு தமிழக சுற்றுலா தலம். அங்கு ஆடி, தை அமாவாசை அன்று இந்துக்கள் திதி கொடுப்பர். காவேரி அம்மன் ஆலயம் சுற்றி தங்கும் விடுதிகள். வெள்ள பெருக்கு. குளிக்க அனுமதி இல்லை. ஆற்றில் சிறிய கம்பி வலை குளம் அமைக்க முடியும். அல்லது சேவகர் நியமித்து, பக்கெட் மூலம் தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து திதி கொடுக்க உதவ முடியும். ஆனால் திராவிடம் ஒன்றும் செய்யவில்லை. குறை கூறினால், எதிர் அறிக்கை 500 பக்கம் விடுவர்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை