| ADDED : ஜூலை 29, 2024 06:46 AM
மைசூரு : அரசு விருந்தினர் மாளிகையின் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், அங்கு தங்க சென்ற மத்திய அமைச்சர் குமாரசாமி ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் குமாரசாமி, மைசூரு நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் நஞ்சன்கூடில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க சென்றார். ஆனால் விருந்தினர் மாளிகை கதவு பூட்டப்பட்டு இருந்தது.இதனால் அங்கிருந்து குமாரசாமி திரும்பி சென்றார்.இந்நிலையில் அரசு விருந்தினர் மாளிகையின் கதவை பூட்டி, குமாரசாமியை வேண்டும் என்றே, மாநில அரசு அவமதித்து இருப்பதாக ம.ஜ.த., தலைவர்கள் குற்றம் சாட்டினர். குமாரசாமியின் பயண பட்டியல் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிந்தாலும், அதிகாரிகள் முன்னேற்பாடு செய்யவில்லை என்று, மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டியிடம், ம.ஜ.த., புகார் அளித்து உள்ளது. இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறி உள்ளார்.