உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை தகுதி நீக்கம் செய்ய யு.பி.எஸ்.சி.,க்கு அதிகாரமில்லை பந்தா ஐ.ஏ.எஸ்., பூஜா பரபரப்பு பதில்

என்னை தகுதி நீக்கம் செய்ய யு.பி.எஸ்.சி.,க்கு அதிகாரமில்லை பந்தா ஐ.ஏ.எஸ்., பூஜா பரபரப்பு பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த, 2022ல் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர் என்ற பெண், மஹாராஷ்டிராவின் புனேவில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அடாவடி

பணி காலத்தில் பல்வேறு அடாவடிகளில் ஈடுபட்டதை அடுத்து அவர் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன.இதை விசாரிக்கும்போது, மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பித்த பூஜா, போலி ஆவணங்கள் வாயிலாக ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.இது தொடர்பாக விசாரித்த யு.பி.எஸ்.சி., பூஜாவின் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியை கடந்த மாதம் ரத்து செய்தது. வருங்காலத்தில் அவர் தேர்வு எழுதவும் தடை விதித்தது. இதை தொடர்ந்து எந்த நேரத்திலும் பூஜா கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது.இதையடுத்து, டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பூஜா கேத்கர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். முன் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்த யு.பி.எஸ்.சி., 'இந்த முறைகேட்டில் பூஜா கேத்கருக்கு ஆதரவாக பலர் செயல்பட்டு இருக்க வாய்ப்புள்ளதால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம்' என, வாதிட்டது. இந்த வழக்கில், பூஜா கேத்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:நான் போலி ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த பின் என் தேர்ச்சியை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் யு.பி.எஸ்.சி.,க்கு இல்லை.

அதிகாரம்

மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறைக்கு மட்டுமே என் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'முன் ஜாமினை எதிர்க்கும் யு.பி.எஸ்.சி.,யின் பதில் மனுவை மறு ஆய்வு செய்ய அவகாசம் வேண்டும்' என, பூஜா கேத்கர் தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்று, பூஜா கேத்கரை கைது செய்ய விதிக்கப்பட்டு இருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஆக 30, 2024 18:36

இவர் பேசாமல் பாஜகவில் சேர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போல் மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக ஆகிவிடலாம்! எல்லா தகுதிகளும் உள்ளது!


Dharmavaan
ஆக 30, 2024 08:55

கேவலமான நீதி எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கிறது


Ramaraj
ஆக 30, 2024 08:31

நீதிபதிகளுக்கு அறிவில்லை


Appan
ஆக 30, 2024 07:08

இது தான் பிஜேபியின் ஆட்சி ..ஊழலை ஒழிப்போம் என்று ஊழலில் ஊரும் பாஜக நாட்டை என்ன செய்யும் ? இந்த யுபிஎஸ்சி தலைவர் ஒரு குஜராத்தி காரர் .அவர் ராஜினாமா செய்து விட்டார் ராஜினாமா செய்தால் ஊழல் அழியுமா


Dharmavaan
ஆக 30, 2024 08:54

அவர் ஊழல் செய்தார் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் இருக்கா குஜராத்தி என்றால் உடனே கிறுக்கு புததியை காட்டுவதா


sankaranarayanan
ஆக 30, 2024 06:55

தவறு செத்துவிட்டு என்ன துணிச்சலான அறிவிப்பு இதுபோன்ற நபர்கள் மாவட்டத்தில் தலைவர்களாக நியமிக்கப்பட்டால் நாடு என்ன ஆகும் விரைவில் டிஸ்மிஸ் செய்யுங்கள் இது ஒரு முன் உதாரணமாகும்


Mani . V
ஆக 30, 2024 04:37

இதை தகுதி நீக்கம் செய்தது தவறு. என்கவுண்டரில் போட்டுத் தள்ளி இருக்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை