மேலும் செய்திகள்
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
1 hour(s) ago
அமிர்தசரஸ்:கிராமத்தில் ஏற்பட்ட தகராறை தடுக்கச் சென்ற பெண் போலீஸ் அதிகாரி மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.வெர்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமன்ஜோத் கவுர் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். இரு பிரிவினரையும் கலைக்க முயற்சித்தனர். அப்போது ஒரு கும்பல் மரக்கட்டையால் பெண் இன்ஸ்பெக்டர் கவுர் மீது சரமாரியாகத் தாக்கியது. பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். போலீசார் துப்பாக்கியைக் காட்டி கும்பலை கலைத்து இன்ஸ்பெக்டரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
1 hour(s) ago