உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 ஆண்டுகளுக்கு பின் தார்வாடில் வினய் குல்கர்னி

3 ஆண்டுகளுக்கு பின் தார்வாடில் வினய் குல்கர்னி

தார்வாட் : கொலை வழக்கில் சிக்கிய தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், தார்வாட்டிற்குள் நுழைந்தார்.தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருந்தவர் யோகேஷ் கவுடா. கடந்த 2017ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி உட்பட சிலரை, 2020ல் சி.பி.ஐ., கைது செய்தது. பெலகாவி ஹிண்டல்கா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வினய் குல்கர்னிக்கு 2021ல் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆனால் தார்வாட் செல்ல அவருக்கு, தடை விதிக்கப்பட்டு இருந்தது.கடந்த சட்டசபை தேர்தலில், தேர்தல் பிரசாரத்திற்கு கூட, வினய் குல்கர்னியால் தார்வாட் செல்ல முடியவில்லை. ஆனாலும் அவருக்காக அவரது மனைவி சிவலீலா பணியாற்றி, கணவரை வெற்றி பெற வைத்தார்.இந்நிலையில் லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, தார்வாட் செல்ல அனுமதி கேட்டு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி சார்பில் மனு செய்யப்பட்டது. அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், வினய் குல்கர்னி தார்வாட் செல்ல அனுமதி கொடுத்தது. ஓட்டு போட்டவுடன், அங்கிருந்து புறப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பின், வினய் குல்கர்னி தார்வாட் சென்றார். சப்தாபுராவில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த, ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை