உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்: அனுராக் தாக்கூர் சொல்கிறார்!

நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்: அனுராக் தாக்கூர் சொல்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிம்லா: 'பா.ஜ., தொண்டர்கள் நிறைய வேலை செய்திருக்கிறார்கள். நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்' என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.ஹிமாச்சல பிரதேசம், ஹமிர்பூரில் உள்ள ஓட்டுச்சாவடியில் அனுராக் தாக்கூர் மற்றும் அவரது தந்தையும், ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமாலும் ஓட்டளித்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அனுராக் தாக்கூர் கூறியதாவது: மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அனைவரும் நல்லாட்சி அமைய ஓட்டளிக்க வேண்டும். பா.ஜ., தொண்டர்கள் நிறைய வேலை செய்திருக்கிறார்கள். நாங்கள் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். மக்கள் ஜனநாயகத்தின் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். வாக்காளர்கள் அனைவரும் தங்களின் ஓட்டுரிமையைப் பயன்படுத்த வேண்டும். வளர்ச்சியைப் பேணுவதில் நமது பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R k Ramanathan
ஜூன் 01, 2024 14:37

நீங்கள் யார் உங்களது அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 01, 2024 23:58

தமிழக மன்னரையே கேள்வி கேக்கறீங்களா ???? மன்னர் தமிழர் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ????


Sampath Kumar
ஜூன் 01, 2024 11:31

எப்படி பட்ட மக்கள் ? காஸ் சிலிண்டர் 5000 ஆனாலும் சரி பெட்ரோல் வில்லை 500 ஆனாலும் சரி நாட்டில்மத வெறி பிடித்து கலவரம் ஆனாலும் சரி நாங்க மோடிக்கு தானவொட் போடுவோம் என்று சொல்லும் ஒருகும்பல் தான் இவர்களை ஆதரிக்கும் மக்கள் அம்புட்டும் யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட்ஸ் தான் அந்த தைரியத்தில் தான் இவரு பிதற்று கிண்டறறு என்ன செய்ய மக்களின் பயன் படுத்தி உள்ளது பிஜேபி


N Sasikumar Yadhav
ஜூன் 01, 2024 14:56

ஊழலில்லாத ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது.... ஊழல் குடும்ப கட்சிகள் தான் புலம்பி கொண்டிருக்கிறது


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 02, 2024 05:19

பி ஜே பி மற்றும் மோடிஜி அவர்களை, நங்கள் வெறும் காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலைக்காக தேர்ந்து எடுக்கவில்லை, அதைவிட முக்கியமான விஷயங்களை செய்யத்தான் அவர்களுக்கு ஓட்ட போடுகிறோம், உன்னை போன்ற திருட்டு ஊழல் கொத்தடிமைகளுக்கு புரியாது. ஒரு கட்டிங் அடித்துவிட்டு தூங்கு.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ