உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தாவுக்கு என்னாச்சு?: விழுந்து விழுந்து ஏன் எழுகிறார்?

மம்தாவுக்கு என்னாச்சு?: விழுந்து விழுந்து ஏன் எழுகிறார்?

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஏப்ரல் 27) ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார். இவர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவது வழக்கமானதாக ஆகிவிட்டது. உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மம்தாவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த மாதம் கோல்கட்டாவின் காளிகாட் பகுதியில் உள்ள தன் வீட்டில், மம்தா பானர்ஜி தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவர் படுகாயம் அடைந்து மயங்கினார். மருத்துவமனையில் மம்தாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நெற்றியில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் மம்தா வெளியிட்டார். தற்போது அவர் குணமடைந்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வாக்காளர்களுக்கு டீ போட்டு கொடுத்து, நடனம் ஆடி மம்தா ஓட்டு சேகரித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e3tjh4uc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று துர்காபூரில் ஹெலிகாப்டரில் ஏறிய பின் இருக்கையில் அமரும் போது மம்தா வழுக்கி கீழே விழுந்தார். மம்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர். இவர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவது வழக்கமானதாக ஆகிவிட்டது.கடந்த 2021ம் ஆண்டும் சட்டசபை தேர்தலின் போது, அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. சில நாட்களாக அவர் வீல் சேரில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.உடல்நிலையை கவனமாக பார்த்து கொள்ளுமாறு மம்தாவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், அவர் தனது திட்டமிடப்பட்ட பயணத்தைத் தொடர்ந்தார். மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Kuppan
ஏப் 30, 2024 18:53

கடந்த முறை தேர்தலின் பொது வீல் சேர் சூப்பர் ஹிட்டாச்சி, இந்த முறை எல்லாம் சொதப்பலா இருக்கு அடுத்த முறை தேர்தலுக்கு முன் மீண்டும் ஒரு முயற்சியை நாம் பார்க்க நேரும், அநேகமா இரத்தம் சொட்ட சொட்ட கையி இல்லை காலை உடைக்க பார்க்கலாம், சோ தருபமா இருக்கும்


Pandi Muni
ஏப் 29, 2024 16:35

ரொம்பவே அடி


SureshKumar Dakshinamurthy
ஏப் 28, 2024 10:16

நாடக நடிகை


venkatakrishna
ஏப் 28, 2024 06:23

மக்களிடம் அனுதாபம் பெற


Minimole P C
ஏப் 28, 2024 07:57

correct


kulandai kannan
ஏப் 27, 2024 23:20

எல்லாம் நாடகம் என்று தயாநிதி கூறிவிட்டாரே


Kuppan
ஏப் 27, 2024 21:03

அடுத்த முறை ஹெலிஹாப்டர் மேலே பறக்கும் பொது மேல இருந்து விழுந்து முயற்சி செய்யயும்


Dharmavaan
ஏப் 27, 2024 20:24

2 முறை என்றாலே அடிக்கடி என்று செய்தியா அனுதாபம் தேடும் ஸ்டண்ட் மம்தா பேகம்


sankaranarayanan
ஏப் 27, 2024 19:56

என்ன நடிப்புடா இது தேர்தல் சமயம் வந்தாலே மக்களை கவர இந்த அம்மையாருக்கு கீழே விழுந்து எழுவது சகஜமாகிவிட்டது காரிலிருந்து கீழே விழுவது காளிகாட்டிலே வீட்டிலே கீழே விழுவது இப்போது ஹெலிகாப்டரில் ஏறும்போது கீழே விழுவது இதெல்லாம் எப்படியடா தேர்தல் சமயத்தில்பட்டும் நடைபெறுகிறது இனி மக்களை ஏமாற்றமுடியாது கீழே விழும் முதலமைச்சர் என்றே பெயரும் வைக்கலாமே


sankaranarayanan
ஏப் 27, 2024 19:56

என்ன நடிப்புடா இது தேர்தல் சமயம் வந்தாலே மக்களை கவர இந்த அம்மையாருக்கு கீழே விழுந்து எழுவது சகஜமாகிவிட்டது காரிலிருந்து கீழே விழுவது காளிகாட்டிலே வீட்டிலே கீழே விழுவது இப்போது ஹெலிகாப்டரில் ஏறும்போது கீழே விழுவது இதெல்லாம் எப்படியடா தேர்தல் சமயத்தில்பட்டும் நடைபெறுகிறது இனி மக்களை ஏமாற்றமுடியாது கீழே விழும் முதலமைச்சர் என்றே பெயரும் வைக்கலாமே


raja
ஏப் 27, 2024 19:56

எலசனுக்கு அப்புறும் சரியா நடப்பாங்க


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை