வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நானும் தமிழன்தான் அப்டின்னு உங்க daleevaru அடிக்கடி சொல்லுவாறே . அவருகிட்ட கேளுங்க எப்போ வேங்கை வயல், கள்ளக்குறிச்சி visit எப்போ?
அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பிரதமர் மோடி, தற்போது ப்ரூனே சென்றுள்ளார். ஆனால், நம் நாட்டின் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்து 16 மாதங்கள் ஆகின்றன. நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். எப்போது மனிதாபிமான அடிப்படையில் பிரதமர் மணிப்பூர் செல்வார்?ஜெய்ராம் ரமேஷ்பொதுச் செயலர், காங்கிரஸ்தந்திரம் செய்கின்றனர்!
பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை, மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்கிறார். ஏனென்றால் உத்தரகண்டில் இருக்கும் சிவில் சட்டம் உ.பி.,யில் இல்லை. டில்லியில் இல்லை. பின் எப்படி பொது சிவில் சட்டம் என கூற முடியும். அதனால் இந்த தந்திரத்தை பயன்படுத்துகிறார். பொது சிவில் சட்டத்துக்கு ஒருமித்த கருத்து தேவை. அபிஷேக் சிங்விராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்
ஒற்றுமையை காட்ட வேண்டும்!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., சொல்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அவர்களின் காதை பிடித்து உட்கார வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.லாலு பிரசாத்மூத்த தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்
நானும் தமிழன்தான் அப்டின்னு உங்க daleevaru அடிக்கடி சொல்லுவாறே . அவருகிட்ட கேளுங்க எப்போ வேங்கை வயல், கள்ளக்குறிச்சி visit எப்போ?