உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றி பெறுவது யார்? ஆரூடம் கணித்த நாய்!

வெற்றி பெறுவது யார்? ஆரூடம் கணித்த நாய்!

மைசூரு: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நாளை நடக்கவுள்ள நிலையில், யார் வெற்றி பெறுவர் என்பது குறித்து, நாய் ஒன்று ஆரூடம் கணித்துள்ளது.ஜூன் 4ம் தேதியை, நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். ஏழு கட்டங்களில் நடந்து முடிந்த, லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, நாளை நடக்கிறது. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என, நாளை தெரியும். ஏற்கனவே கருத்து கணிப்புகள் வெளியானது.இதற்கிடையில் மைசூரில் நாய் ஒன்று, எந்த கட்சி வெற்றி பெறும் என, ஆரூடம் கணித்து உள்ளது. மைசூரின், கே.டி.ஸ்ட்ரீட்டின் கால பைரவேஸ்வரா கோவிலில் பைரவா என்ற நாய் உள்ளது. 2 வயதான இந்த நாயை கோபிநாத் என்பவர் வளர்க்கிறார். ஆரூடம் கணிப்பதில் பெயர் பெற்றதாகும்.இம்முறை லோக்சபா தேர்தலில், யார் வெற்றி பெறுவர் என்பதை ஆரூடம் கணித்துள்ளது. நாயின் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் போட்டோக்களை வைத்த போது, மோடியின் போட்டோவை தொட்டு காண்பித்து, அவரே வெற்றி பெறுவார் என்பதை உணர்த்தியது.அதேபோன்று மைசூரு லோக்சபா தொகுதி வேட்பாளர்கள் பா.ஜ.,வின் யதுவீர், காங்கிரசின் லட்சுமண் போட்டோவை வைத்த போது, யதுவீரின் படத்தை தொட்டு காண்பித்துள்ளது. இது தொடர்பான, படங்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ashanmugam
ஜூன் 03, 2024 22:29

இந்தியாவில் கருத்து கணிப்புக்கு ஒன்னு பாக்கியில்லை. மனிதன் முதல் நாய் வரை ஆருடம் சொல்கின்றனர். இதில் உண்மை என்னவென்றால் " மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்பதை மறந்து விட்டு, இந்தியாவில் தேர்தலில் ஓட்டு போட்ட 90 கோடி மக்களையும் நேரடியாக பேட்டி கண்டது போல் கருத்து கணிப்பு வெளியிடுகின்றனர். இது முற்றிலும் வேறுபாடானது என்பதை மக்கள் உணர வேண்டும். ஏதோ தோராயமாக ஆங்காங்கே "ரேன்டம்"ரெண்டோம் சர்வே மூலமாக மக்களின் பிரதிபலிப்பை தேர்தல் கருத்து கணிப்பு மூலம் பிரசுரிப்பது மாபெரும் தவறு. இதை ஊர்ஜிதம் செய்ய நாளை தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு மாநிலம் வாரியாக, கருத்து கணிப்பு வெளிட்ட நாளிதழ் மூலம் ஒப்பிட்டு பாருங்கள்.அப்போது தெரியும் கருத்து கணிப்பு உண்மையா அல்லது பொய்யா என? முடிவாக ஸ்ரீராமர் கோயில் பிரதிஷ்டை செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த பாரத பிரதமர் கையில் ஸ்ரீ ராமபிரான் ஒப்படைக்க போறாறா அல்லது ஸ்ரீராமபிரான் மற்றும் ஸ்ரீராமர் கோயிலை இழிவு படுத்திய, கொச்சை படுத்திய, கேவலப்படுத்திய ராகுல்காந்தி கூட்டணி கட்சிகளிடம் ஒப்படைக்கப் போறாறா என்பது நாளை பொழுது விடிந்தவுடன் பாரத மக்களுக்கு தெரியும். ஸ்ரீ ராமபிரான் நாமம் வாழ்க வாழ்க வாழியவே.

Venkatesan
ஜூன் 03, 2024 20:55

நாய்க்கு அல்லாடி உறுதி... அந்த வாயில்லா ஜீவனை பத்திரமாக தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்கவும்.

Jay
ஜூன் 03, 2024 19:30

இங்க கிளிக்கு நேர்ந்த பகுத்தறிவு கொடுமை அங்கு நடக்காமல் இருக்கட்டும். பகுத்தறிவு ரொம்ப போக்கினால் இப்படி தான்.

Ramesh Sargam
ஜூன் 03, 2024 11:52

அந்த நன்றியுள்ள மிருகத்தை பத்திரமாக பாதுகாக்கவும்.

மேலும் செய்திகள்