உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்?: கேட்கிறார் நட்டா

பயங்கரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்?: கேட்கிறார் நட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '2008ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஏன் அழுதார்?' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து நட்டா கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதி, மத அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன. பிரதமர் மோடி அரசியலின் வரலாறு மற்றும் கலாசாரத்தை மாற்றியுள்ளார். தேச விரோதிகள் மற்றும் நாட்டை பலவீனப்படுத்துபவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதும் ஆதரவாக நிற்கின்றன. 2008ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஏன் அழுதார்?. பயங்கரவாதிகளுக்காக சோனியா அழுதார் என காங்கிரஸ் தலைவர்களே கூறினர். துரோகிகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?. இதன் பின்னணி என்ன?. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Balasundaram P
ஏப் 27, 2024 16:50

இதற்காகத்தான் சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று காந்திஜி கூறினார்


Lion Drsekar
ஏப் 25, 2024 16:29

இனிப்பு இருக்குமிடம் தேடி எறும்பு வரும், தேன் இருக்குமிடத்தில் வண்டுகள் மற்றும் தேனீக்கள் வரும் , ஒரு செல் பூச்சி, பறவைகள் , எல்லாமே நல்லவரிகள் இருக்குமிடத்தில்தான் வரும்


venugopal s
ஏப் 25, 2024 15:03

கடந்த பத்து ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சியில் இருந்தீர்கள், மறந்து போய் விட்டதா அல்லது தூங்கிக் கொண்டு இருந்தீர்களா? அப்போது எல்லாம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு இப்போது வந்து புதிதாக குற்றம் சுமத்தினால் நம்பும்படி இல்லையே!


Balachandran Subramaniyan
ஏப் 25, 2024 15:12

சோனியா அழுததாக இப்போதுதான் காங்கிரஸ்காரர்களே ரகசியத்தை வெளியிட்டு உள்ளனர் எனவே இனிதான் கேள்வி வரும்


Elangovan KANNAN
ஏப் 25, 2024 17:20

Since what they are doing, he is rulling years take action against him ?


Rajah
ஏப் 25, 2024 13:52

இவர்கள் வாழ வேண்டுமென்றால் பயங்கரவாதிகள் வாழ வேண்டும் பயங்கரவாதிகளை வளர்க்கும் காங்கிரஸ், திராவிட, கம்யூனிச சித்தாந்தங்களை களையுங்கள் நாடு வளர்ந்துவிடும்


Rajah
ஏப் 25, 2024 13:44

நமது பிரதமர் இந்த நாட்டிற்கு வரப்போகும் ஆபத்து பற்றி தெளிவாக மக்களுக்கு விளக்கியுள்ளார்


Kasimani Baskaran
ஏப் 25, 2024 12:28

காங்கிரசின் முதலீடே பொய்கள்தான் சுதந்திரம் கூட காங்கிரஸ்தான் வாங்கிக்கொடுத்தது போல வேறு உருட்டுவார்கள் ஆயிரம் பேரரசுகள் இருந்தாலும் கூட மொகலாயர்கள்தான் இந்தியாவை இரட்சித்தது போல கதை எழுதினார்கள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை