உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வினர் கானாபுராவில் ஓட்டு கேட்பது ஏன்?

பா.ஜ.,வினர் கானாபுராவில் ஓட்டு கேட்பது ஏன்?

பெலகாவி : “கானாபுராவில் பா.ஜ.,வினர் ஓட்டுக் கேட்பது ஏன்?” என, காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர் கேள்வி எழுப்பினார்.உத்தர கன்னடா காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர் பேட்டி: உத்தர கன்னடா தொகுதியில் பா.ஜ., பல ஆண்டுகளாக செல்வாக்கு செலுத்துகிறது என்று தெரியும். ஆனால் இம்முறை மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எங்கள் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ., தேஷ்பாண்டே ஆதரவு எனக்கு உள்ளது.உத்தர கன்னடாவிற்கு பன்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படவிருந்தது. ஆனால் சிலர் தடுத்துவிட்டனர். இங்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. நான் எம்.பி., ஆனால் தொகுதியில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை அளிப்பேன்.பா.ஜ., மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்கிறது. வளர்ச்சிப் பணிகள் செய்து மக்களை சந்திக்கிறோம். காங்கிரஸ் பெரிய கட்சி. குடும்பத்தில் சண்டை, சச்சரவு இருப்பது போன்று, கட்சியில் இருப்பவர்களிடம் மனக்கசப்பு ஏற்படுவது இயல்பு தான். காங்கிரஸ் வேட்பாளர் வெளிமாவட்டத்துக்காரர் என்று பா.ஜ.,வினர் பிரசாரம் செய்கின்றனர். எனது ஊர் கானாபுரா.உத்தர கன்னடா லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு, கானாபுரா வருகிறது. நான் எப்படி வெளிமாவட்டத்துகாரர் ஆவேன். எங்கள் ஊர் மக்கள் ஓட்டு போடாமல் தான், இத்தனை ஆண்டுகள் பா.ஜ., வெற்றி பெற்றதா; கானாபுரா வேறு மாவட்டம் என்றால், பா.ஜ.,வினர் ஓட்டுக் கேட்பது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை