மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago
உத்தம்நகர்: மேற்கு டில்லியின் உத்தம்நகர் மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கீழே குதித்து, பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.உத்தம் நகர் மேற்கு மெட்ரோ ரயில் நிலையம் நேற்று பிற்பகல், வழக்கமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்துக்குள் வந்த ஒரு பெண், நடைமேடையில் இருந்து வெளியே திடீரென கீழே சாலையில் குதித்தார்.படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இறந்த பெண், 40 வயதுக்குட்பட்டவராக இருந்தார். அவரை அடையாளம் காண உதவும் எதுவும் அவரிடம் இல்லை. மெட்ரோ நிலையம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
7 hour(s) ago | 2
13 hour(s) ago