உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் டாக்டர் கொலை: குற்றவாளியை தூக்கிலிட மம்தா வலியுறுத்தல்

பெண் டாக்டர் கொலை: குற்றவாளியை தூக்கிலிட மம்தா வலியுறுத்தல்

கோல்கட்டா: பெண் பயிற்சி டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கு வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. நாட்டை அலற வைத்துள்ள இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுதும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி கோல்கட்டா நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன. 25 பேர் கொண்ட குழு விசாரணையில் இறங்கியுள்ளது.இது குறித்து இன்று மம்தா பானர்ஜி கூறியது, பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கை மேற்கு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சி.பி.ஐ.,க்கு தேவையான ஒத்துழைப்பை எனது அரசு வழங்கும். இச் சம்பவத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்குவது சரியல்ல. வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்பாவி
ஆக 15, 2024 13:24

தூக்கில்தானே? வாய்ப்பே இல்லை. இந்த வழக்கை எல்லா விதமாவும் ஜோடிச்சு நியூ சம்ஹிதா மசாலாவையும் சேத்து வெச்சு அரைச்சு ஆதாரம் பாத்லைன்னு மஹிளா கோர்ட்டே விடுதலை செஞ்சுரும். எல்லா விதமான ஃப்ராடுத்தனங்களும் எதிர்பார்க்கலாம்.


Kumar Kumzi
ஆக 15, 2024 07:56

ஹை ட்ராமா குயீன் கூவுது ஓட்டு போட்ட மக்களை என்னனு சொல்லுறது


Barakat Ali
ஆக 15, 2024 06:43

கற்பின் அருமை இவருக்குத்தான் தெரியும் .....


Kasimani Baskaran
ஆக 15, 2024 05:51

இவர் என்ன நீதிபதியா?


vijai Mathur
ஆக 15, 2024 02:23

உனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னி எதிர்க்கட்சியின் அரசியல் ஆக்குவது சொல்றீங்களே நீங்க இதை செய்யலையா


sankaranarayanan
ஆக 15, 2024 01:50

பெண் பயிற்சி டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார் சற்று முந்துக்கொண்டு பேசுகிறார் மமதையில் ஆட்சில் எவ்வளவோ கொலைகள் கொள்ளைகள் கர்பழிப்புகள் நடந்துள்ளன இவைகளை ஒருபோதும் கண்டுகொள்ளாத மமதை இப்போது தலைக்குமேலே போனபின் தனது ஆட்சிக்கே ஆபத்து வரும் சமயத்தில் வாயைத்திறக்கிறார் இதுவரையில் கொலைகளுக்கு யார் பொறுப்பு மாணவர்கள்தான் இதை கேட்கவேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை