உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொற்கோவிலில் யோகாசனம்: குருத்வாரா கமிட்டி கண்டனம்

பொற்கோவிலில் யோகாசனம்: குருத்வாரா கமிட்டி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் யோகாசனம் செய்த வீடியோ வைரலானது. இச்செயலுக்கு குருத்வாரா கமிட்டி கண்டனம் தெரிவித்து உள்ளது.கடந்த 21 ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் யோகாசனம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து சிறப்பித்திருந்தது.இந்நிலையில் அர்ச்சனா மக்வானா என்ற பெண் யோகா பயிற்சியாளர், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள பொற்கோவிலில் வளாகத்தில் ஒரு சில ஆசனங்கள் செய்து அதனை சமூக வலை தளத்தில் பதிவிட்டார். யோகாசனம் நிகழ்ச்சி சமூக வலை தளத்தில் வைரலானதை அடுத்து பொற்கோவிலின் சிரோன்மணி குருத்வாரா பர்பந்தக்கமிட்டி கண்டனம் தெரிவித்து போலீசில் புகார் அளித்துள்ளது,இதனையடுத்து மக்வானா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியுள்ளார். தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு வெளிட்ட பதிவில் யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும்,குர்த்வாரா சாஹிப் வளாகத்தில் யோகா பயிற்சி செய்வது சிலருக்கு புண்படுத்தும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை, ஏனென்றால் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்றும் நான் ஏற்படுத்திய காயங்களுக்கு நான் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மேலும் எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எனது உண்மையான மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்,' என்று அவர் மேலும் கூறினார்.மக்வானா மன்னிப்பு கேட்ட போதிலும் தனக்கு தொலை பேசி மூலம் கொலை மிரட்டல் வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sriram balasubramanian
ஜூன் 23, 2024 07:19

எதற்கெடுத்தாலும் சர்ச்சை, மிரட்டல் என்றாகிவிட்டது. மக்கள் முன்னேற்ற பாதையில் மதம் என்பது வெளிக்கொணர்வதை விட பூட்டி வைக்கபடவேண்டிய ஒன்று. யோகா எதிர்க்கப் பட வேண்டிய ஒன்றல்ல. எங்கு பண்ணால் என்ன அசுத்தமா செய்தாள் அந்த பெண் தலையில் துணி கட்டி கோவில் விளாகத்தில் பாரம்பரியத்தை கடைபிடித்தாள். விளம்பரம் தேடாமல் இருந்திருக்கலாம். அதற்கு மன்னிப்பும் கேட்டாகிவிட்டது. இன்னும் என்ன வேலையற்றவர்களுக்கு?


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 05:55

வழிபாட்டுத்தலத்தை சுயவிளம்பரத்திற்காக பயன்படுத்தியது தவறு......ஆனால் அதே வழிபாட்டு தலத்தில் அந்நிய மாற்று மதத்தினர் வழிபாடு நடத்தினால் அதுக்கு மட்டும் இந்த குருத்வாரா கமிட்டி வாய் திறக்காது .....


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 05:53

சீக்கியம் என்பதை ஹிந்து மதத்தின் பிரிவாகவே பார்க்கத் தோன்றுகிறது என்பதெல்லாம் இப்பொது கிடையாது ..அரசியல் சட்டப்படி சீக்கியம் ஹிந்து மதத்தின் பிரிவு ....ஒரே ஜாதியில் ஹிந்து சீக்கியர் திருமணம் நடக்குது ....ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது .....பஞ்சாப் எல்லை மாநிலத்தில் போதை மருந்து சர்வ சாதாரணம் ..பல கிராமங்கள் முழுக்க போதை மருந்து அடிமை ...பாகிஸ்தான் பஞ்சாபிகளுக்கு ஆதரவான மன நிலை ....பஞ்சாப் மாநிலம் முழுக்க அந்நிய மதம் மாற்றம் நடக்குது ....மத்திய பிரதேசத்தில் சிந்தி ஹிந்து மக்கள் வழிபாட்டு தலத்தில் வைத்திருந்த புனித சீக்கிய மத புத்தகங்களை சீக்கிய தீவிரவாதிகள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக எடுத்து சென்று விட்டார்கள் ...


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 23, 2024 05:28

வர வர ஹிந்துக்களை பாலைவன பயங்கரவாத மதத்தினரிடம் இருந்து காக்க உருவான பிரிவு, இந்துக்களுக்கு எதிராக அதே பயங்கரவாத மதம் போல மாறிவருவது வருத்தமளிக்கிறது. இவர்களுக்கு வக்கு இருந்தால் பாக்கிஸ்தான் வசம் இருக்கும் 60% பஞ்சாபை முதலில் மீட்கட்டும். தற்போது பஞ்சாபில் கிருத்துவ மதத்திர்ற்கு மாற்றும் கொடுமை மிக அதிகமாக நடக்கிறது . குருத்துவரா கமிட்டிக்கு அது கண்களில் தெரியவில்லையா?


சண்முகம்
ஜூன் 22, 2024 23:27

வழிபாட்டுத்தலத்தை சுயவிளம்பரத்திற்காக பயன்படுத்தியது தவறு.


RAMAPRASAD.S
ஜூன் 22, 2024 22:03

யோகா தினம் என்பது உலகளவில் ஒத்துக் கொள்ளப் பட்ட ஒரு ஆரோக்யமான செயல். அதற்கு மிரட்டல் விடுகிறார்கள் என்றால் அதில் அரசியலை தவிர வேறொன்றுமில்லை. இந்தியா என்பது ஒன்றுபட்ட கண்டம். பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடமில்லை. எங்கள் பாரத நாடு புண்ய பூமி. வேற்றுமையில் ஒற்றுமையாய் இருப்பவர்கள் நாங்கள். இந்த நாட்டை பிடிக்காதவர்கள் தயவுசெய்து கனடாவிற்கு செல்லலாம்.


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 21:44

அன்னியப் படைகளிலிருந்து ஹிந்துக்களை காப்பாற்ற உருவானது சீக்கியம். பத்து குருமார்களில் ஒருவருமே சீக்கிய மதம் என்ற ஒன்றை உருவாக்கவுமில்லை பின்பற்றவில்லை எனப் படித்திருக்கிறேன்..புனிதப் புத்தகம் குரு கிரந்த சாஹிப்பில் கூட ராமர் பெயர் பல இடங்களில் உள்ளதாம். தற்போது சீக்கியம் என்பதை ஹிந்து மதத்தின் பிரிவாகவே பார்க்கத் தோன்றுகிறது. யோகாவை ஹிந்துத்துவத்தின் அடையாளமாக பார்ப்பது தவறு. SGPC கமிட்டி ஒற்றுமைக்கு மட்டுமே பாடுபடட்டும்.


Saai Sundharamurthy AVK
ஜூன் 22, 2024 21:29

யோகாசனம் என்பது ஒரு ஆன்மிக ரீதியான புனிதம் நிறைந்த ஒரு உடற்பயிற்சி. பிரபஞ்ச சக்திகளை நம் உடலுக்குள் கொண்டு வரும் ஒரு மகத்தான உடற்பயிற்சி. இதில் எந்த உணர்வும் பாதிக்கப்பட வாய்ப்பு கிடையாது. இதற்கு எதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் ?? மிரட்டல் எதற்கு விடுக்க வேண்டும் ??? கண்டனம், மிரட்டல் விடுப்பவர்களுக்கு சரியான புரிதல் கிடையாது என்பது தெளிவாகிறது. மிரட்டல் விடுப்பவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.


Svs Yaadum oore
ஜூன் 22, 2024 21:27

இதே குருத்வாரா கமிட்டி ஒஞ்சாபி மாநிலம் முழுக்க நடக்கும் மதம் மாற்றங்களை ஏன் பார்த்து கொண்டு சும்மா உள்ளது ??.....பஞ்சாப் மாநிலம் விரைவில் கேரளா போன்று மாறும் நிலைமை ...


Priyan Vadanad
ஜூன் 22, 2024 21:16

வழிபாடுகளுக்காக இருக்கும் இடங்களில் இந்த வகையான உடற்பயிற்சிகளுக்கு இடமில்லை என்கிற நிலை உருவாகவேண்டும். ஆனால் யோகா என்கிற பெயரில் உடற்பயிற்சியாளர்கள் பண்ணுகிற லூட்டியைத்தான் யூடியூபில் நிறைய பார்க்கிறோமே சும்மா ஒற்றைக்காலில் நிற்கப்போகிறேன் என்று சொல்லி வேடிக்கை காட்டிய அரசியல் தலைவர்கள் யோகா என்கிற பெயரில் நடத்திய கூத்து இருக்கிறதே


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 23, 2024 05:25

பிரியன் வடநாடு, யோகா என்பது ஆன்மிகம் கலந்தது. பாலைவன பயங்கரவாத மதத்தினருக்கு, அதுவும், ஹலால் என்று துடிக்க துடிக்க சாக வைப்பதை புனிதம் என்று சொல்பவர்களுக்கு யோகா கூத்தாகத்தான் தெரியும், திருட்டு திராவிட கும்பல் ஸ்ட்ரீட் பெஸ்டிவல் என்று போதை விற்பனைக்கு அடித்தது உனக்கு புனிதம் ? அப்படித்தானே?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ