உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வாலிபர் கைது

மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வாலிபர் கைது

ஜாப்ராபாத்: வடகிழக்கு டில்லியின் ஜாப்ராபாத்தில் கடந்த மாதம் மூதாட்டியைக் கொன்ற வழக்கில் காவலாளியை போலீசார் கைது செய்தனர்.கடந்த மாதம் 14ம் தேதி, ஜாப்ராபாத்தில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி, அவரிடம் இருந்து நகைகள், ஸ்மார்ட் வாட்ச், மொபைல் போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார்.ஜி.டி.பி., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி, 18ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து மூதாட்டியின் மகன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த கொலை, கொள்ளை தொடர்பாக, கோண்டா பகுதியின் ஒரு கட்டுமான தளத்தில் காவலாளியாக பணிபுரியும் ராஜன் ஷர்மா, 24, என்பவரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.அவரிடம் இருந்து நகைகள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.கொள்ளைக்கு பயன்படுத்திய பைக் மற்றும் வீடுகளை உடைப்பதற்கான கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை