உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் தண்டவாளத்தில் விபரீத வீடியோ எடுத்த யூடியுப்பர் கைது

ரயில் தண்டவாளத்தில் விபரீத வீடியோ எடுத்த யூடியுப்பர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில் தண்டவாளத்தில் சைக்கிள், கற்கள், சிலிண்டர்களை , சோப்பு ஆகியவற்றை வைத்து வீடியோ எடுத்து விபரீத செயலில் ஈடுபட்ட யூடியுப்பர் மீது வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச்சேர்ந்த யூடியுப்பர் குல்சார் ஷேக் இவர் லால் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தின் மீது சிறிய சைக்கிள், மற்றும் கற்கள், சோப்பு ,சிறிய இரும்பு துண்டு என வைத்து ரயில் அதன் மீது செல்லும் போது வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். வீடியோ வைரலானதை அடுத்து குல்சார் ஷேக் செயலால் பெரும் ரயில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அவரது விபரீத செயலை தடுத்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரினர். போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழ்வேள்
ஆக 03, 2024 10:51

இந்த மாதிரியான டிக்கெட்டுகளை இரயில் கப்ளிங்கில் மாட்டி இழுத்து சிதறடித்தால், பிறகு எவனும் இந்த மாதிரியான வேலைகளை செய்ய மாட்டான்.


Kasimani Baskaran
ஆக 03, 2024 05:57

சில லோக்கோ பைலட்டுகள் இவர்களுக்காக இரயிலை நிறுத்தி கீழே இறங்கிவந்து தர்ம அடி கொடுக்கும் வீடியோவும் கூட சமூகவலைத்தளங்களில் உண்டு...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை