உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதைப்பொருள் கடத்தல் மூவருக்கு 10 ஆண்டு சிறை

போதைப்பொருள் கடத்தல் மூவருக்கு 10 ஆண்டு சிறை

குடகு: போதைப்பொருளை கடத்திய மூவருக்கு, 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, மடிகேரி மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த 2022 ஆகஸ்ட் 29ல், குடகின், பாகமண்டலா - மடிகேரி சாலையில், சந்திப்பு அருகில் காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாகமண்டலா போலீசார், அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த காரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, ஹாசிஷ் ஆயில் என்ற போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1.160 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். இதை கடத்திச் சென்ற கேரளா, காசரகோடின் அகமது கபீர், 37, முகமது முஜமில், 37, அப்துல்காதர், 37, ஆகியோர் கைது செய்யப்பட்டார்.விசாரணை முடித்து, மடிகேரியின் முதன்மை மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில் மூவரின் குற்றம் உறுதியானதால், 10 ஆண்டு கடுங்காவல் சிறை, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ