உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1000 கி.மீ., சென்று தாக்கும் ஏவுகணை: விரைவில் இந்தியா சோதனை

1000 கி.மீ., சென்று தாக்கும் ஏவுகணை: விரைவில் இந்தியா சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போர்க்கப்பல்கள் அல்லது விமானம் தாங்கி கப்பல்களை தாக்கக்கூடிய திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா விரைவில் சோதனை செய்ய உள்ளது.இது குறித்து டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:இன்னும் சில நாட்களில், 1000 கி.மீ., தொலைவில் உள்ள போர்க்கப்பல்கள் அல்லது விமானம் தாங்கி கப்பல்களை தாக்கக்கூடிய வகையில் , பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்ய இருக்கிறோம்.வெற்றிகரமான சோதனைக்கு பின், இந்த ஏவுகணைகள் இந்திய கடற்படைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, வழங்கப்படும்.இந்த பாலிஸ்டிக் ஏவுகணையானது போர்க்கப்பல்கள் மற்றும் கரை சார்ந்த இடங்களில் இருந்து ஏவக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Sasikumar Yadhav
நவ 11, 2024 07:21

பாரதநாட்டிற்கு எதிராக இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஒழிக்க மற்றும் பாகிஸ்தானில் இருந்து கொண்டு பாரதத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துபவர்களை குறிவைத்து அழிக்க ஏவுகனைகளை நமது பெருமை வாய்ந்த விஞ்ஞானிகள் விரைவில் கண்டுபிடிக்க கடவுள் அருள்புரிய வேண்டும்


Kasimani Baskaran
நவ 11, 2024 04:52

சிறப்பு. விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.


aaruthirumalai
நவ 10, 2024 22:34

congratulations!


சமீபத்திய செய்தி