உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பரிதாப பலி

குஜராத்தில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வடோதரா, குஜராத் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் 14 பேர், ஆசிரியர்கள் இருவர் பலியாகினர். குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகரில் ஹரினி என்ற பிரசித்தி பெற்ற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நேற்று பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட, 27 பேர் சுற்றுலா சென்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு புறப்பட்டது. ஏரியின் மையப்பகுதியில் படகு சென்ற போது, திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 14 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான மற்ற மாணவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

mrsethuraman
ஜன 19, 2024 16:02

இம்மாதிரி விபத்துக்கள் தொடர்கதை ஆகிவிட்டன. நீர்வழி போக்குவரத்து ,மற்றும் சுற்றுலா படகுகளின் பாதுகாப்பை கண்காணிக்க மாநில அரசாங்கத்தின் அமைப்பு ஒன்று இருக்க வேண்டும் .பாதுகாப்பு உடை இல்லாத படகுகளை அனுமதிக்க கூடாது .ஒவ்வொரு படகிலும் அதன் பிரயாணிப்பவர்கள் கொள்ளளவு கொட்டை எழுத்தில் எழுதபட்டிருக்க வேண்டும்.


nizamudin
ஜன 19, 2024 07:17

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி


Ramesh Sargam
ஜன 19, 2024 01:28

அளவுக்கு அதிகமானவர்களை அந்த படகில் ஏற்றி இருப்பார்கள். நம் மக்களுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வருவதில்லை. இது ஒரு விபத்து. இதில் யாரும் அரசியல் செய்யாதீர்கள்.


சோலை பார்த்தி
ஜன 18, 2024 22:38

ஐயகோ....


kulandai kannan
ஜன 18, 2024 20:23

குழந்தைகள் சுற்றுலா தேவையற்றது. துர்மரணங்களில் இந்தியாவை மிஞ்சமுடியாது. ஆனால் யாருக்கும் அக்கறை இல்லை.


அப்புசாமி
ஜன 18, 2024 20:01

நாமதான் வல்லரசு. அங்கேதான் இதுமாதிரியெல்லாம் நடக்கும்.


ஆனந்த்
ஜன 18, 2024 19:54

கொஞ்சம் கூட சட்டத்தை மதிக்காமல் , கூடுதல் எண்ணிக்கையை படகில் ஏற்றுகிறார்கள் ...நேரில் கண்டிருக்கிறேன்


aaruthirumalai
ஜன 18, 2024 19:50

இறைவா... குழந்தைகளுக்கு ஏன்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை