உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் மர்ம பொருள் வெடித்ததில் 12 வீடுகள் சேதம்; 10 வயது சிறுவன் பலி

பெங்களூரில் மர்ம பொருள் வெடித்ததில் 12 வீடுகள் சேதம்; 10 வயது சிறுவன் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆடுகோடி: பெங்களூரில் மர்ம பொருள் வெடித்து சிதறியதில், 12 வீடுகள் சேதமடைந்தன. 10 வயது சிறுவன் உயிரிழந்தான்; ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். கர்நாடகாவின் பெங்களூரு, ஆடுகோடி சின்னய்யனபாளையாவில் ஸ்ரீராம் காலனி உள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகள் அருகருகே நெருக்கமாக இருக்கும். நேற்று காலை 9:00 மணி அளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. 2 கி.மீ., துாரம் வரை கேட்ட சத்தத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீராம் காலனியில், 12 வீடுகள் பயங்கர சேதமடைந்தன. சில வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. கவலைக்கிடம் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து ஒரு சிறுவன் உட்பட 10 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி முபாரக், 10, என்ற சிறுவன் உயிரிழந்தான். சரஸ்வதி என்பவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் உட்பட ஒன்பது பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது. சிலிண்டர் வெடித்தது என்று முதலில் தகவல் வெளியான நிலையில், அதை அப்பகுதி மக்கள் மறுத்தனர். சிலிண்டர் வெடித்திருந்தால் தீ, புகை கிளம்பி இருக்கும். இங்கு அப்படி எதுவும் இல்லை. ஏதோ மர்ம பொருள் வெடித்து இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், தெற்கு மண்டல டி.சி.பி., சாரா பாத்திமா உள்ளிட்டோரும் சென்றனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தடய அறிவியல் ஆய்வகத்தினரும் சென்றனர். வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெளியே எடுக்கப்பட்டன. ரூ.5 லட்சம் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின், சித்தராமையா அளித்த பேட்டியில், ''மேலோட்டமாக பார்க்கும்போது சிலிண்டர் வெடித்தது தெரிகிறது. ''உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சேதமடைந்த வீடுகளையும் சரி செய்து கொடுப்போம்,'' என்றார். போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் கூறுகையில், ''சிலிண்டர் வெடித்ததா, மர்ம பொருள் வெடித்ததா அல்லது வேறு எதுவும் காரணமா என்று தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. அதற்குள் எதுவும் சொல்ல முடியாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 16, 2025 12:59

கோவையில் குண்டு வெடித்தது இண்டி கூட்டணியில் உள்ள நமது முதலமைச்சர் காவல் துறை சிலிண்டர் வெடித்தது என்றார்கள். கர்நாடகாவில் இண்டி கூட்டணி முதலமைச்சர் 2 கிலோமீட்டர் சத்தம் கேட்டாலும் சிலிண்டர் வெடித்தது என்கிறார். இண்டி கூட்டணி மிகவும் பலமான கூட்டணி.


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2025 04:47

தமிழகத்தை மிஞ்சி விட்டது கர்நாடகா , குண்டு போன்ற ஒரு மர்ம பொருள் வெடித்துள்ளது , ஆனாலும் அவர்களுக்கு அரசின் பண உதவி , ஜமேஷா முபீன் போன்றோரை வாழவைக்கும் கர்நாடகாவை பார்


நரேந்திர பாரதி
ஆக 16, 2025 04:32

மர்ம பொருள் வெடித்து, மர்ம நபர் உயிரிழப்பு மேலோட்டமாக பார்க்கும்போது சிலிண்டர் வெடித்தது தெரிகிறது."... நம்ம தமிழ்நாடுதான் தத்தின்னு நினைச்சா, எல்லாரும் அப்பிடியே இருக்குரானுங்க


நிக்கோல்தாம்சன்
ஆக 16, 2025 21:30

உங்க தமிழ்நாடாவது தடத்தியை வைத்துள்ளது , இங்கே கருநாடகத்திலோ ஓடி போயி வெடிகுண்டை செய்த்துவதுக்கு காசு கொடுத்திட்டு வருது ஒரு புண்ணாக்கு


karupanasamy
ஆக 16, 2025 04:16

அது என்னடா மோலகாரப்பயலுக ஒரேமாதிரி சிலிண்டர் உருட்டுறீங்க?


N Sasikumar Yadhav
ஆக 16, 2025 04:02

நமது திராவிட மாடல் மொதல்வர் சாராயம் காய்ச்சியவனுக்கும் உதவி தொகை கொடுத்தது போல கர்நாடக மொதல்வர் சிலிண்டரு அல்லது மர்ம பொருள் வெடித்த வீட்டின் உரிமையாளருக்கும் உதவி தொகை கொடுப்பது கேலிக்குரியது ஓட்டுப்பிச்சைக்காக என்னேன்னவோ நாடகம் நடத்துகிறானுங்க ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கொத்தடிமைகள்


ரங்ஸ்
ஆக 16, 2025 03:28

விசாரணை முடியாமல் அதற்குள் சிலிண்டர் வெடித்தது என்று தகவல் பரப்புகிறார் திராவிட மாடல் கர்நாடகா.முதல்வர்.


M Ramachandran
ஆக 16, 2025 03:09

எவனும் பொது மக்கலைய்ய விட முக்கிய மானவன் இல்லை.நீதி மன்றம் சட்ட பொந்துக்குள் நுழைந்து ஐயயோ அப்பா பாவம் பரிதாபம் பார்க்க கூடாது


M Ramachandran
ஆக 16, 2025 03:07

ஆரம்பிச்சுட்டாங்க ஐயா ஆரம்பிச்சுட்டாங்க. இதற்கு ஒட்டு பொறுக்க மறை முகமாகவோ இல்லை ஊடகங்கள் மூலமோ ஆதரவாகா குரல் எழுப்பும் குரல் வளையை நெறிக்க வேண்டியது கட்டாயமாகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை