மேலும் செய்திகள்
பதிலடி கொடுப்பேன்!
21 minutes ago
பிஜப்பூர்: நாட்டில் நக்சல்களை 2026ம் ஆண்டு மார்ச்சுக்குள் முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதையடுத்து நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள கங்கலுார் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர், பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் போலீசார், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா பிரிவினருடன் இணைந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பதிலுக்கு அவர்களும் சுட்டனர். இரு தரப்புக்கும் நடந்த சண்டையில், 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இந்த சண்டையில் மாவட்ட ரிசர்வ் போலீசார் மூவர் உயிர்தியாகம் செய்தனர். மேலும் இரு போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தையும் சேர்த்து சத்தீஸ்கரில் இந்தாண்டில் மட்டும், 275 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 246 நக்சல்கள் பஸ்தார் பகுதியை சேர்ந்தவர்கள்.
21 minutes ago