உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசார் மீது தாக்குதல்; ராணுவ வீரர்கள் மீது வழக்கு

போலீசார் மீது தாக்குதல்; ராணுவ வீரர்கள் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: போலீசார் மீது தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த ராணுவ வீரர்கள் சிலர் அங்கு இருந்த போலீஸ்காரர்களை அடித்தும், உதைத்தும் தாக்கினர். மேலும் துப்பாக்கி முனைகள் மூலம் அடித்துள்ளனர். இந்த சம்பவம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதும், எஸ்.பி., விசாரித்தார். போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக 16 ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இரு தரப்பு பாதுகாப்பு தொடர்பாக லேசான கருத்து வேறுபாடு காரணமாக இந்த மோதல் நடந்ததாகவும், பின்னர் பேசி முடித்து வைக்கப்பட்டதாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
மே 30, 2024 18:39

பணி ஒழுங்கு திராவிட சிந்தாந்தம் மூலம் சிதைந்து விட்டது. ராணுவ வீரர்கள் தாக்கினாலும் FIR போட போலீசுக்கு அதிகாரம் இல்லை. உயர் மட்டத்தில் பேச்சு நடத்தி, நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் தான் எடுக்க முடியும். நீதிமன்றம் விசாரிக்க கூடாது. முதலில் தராசு சின்னம் மாற்ற வேண்டும். தராசு தங்கம் , குப்பை சம எடை இருந்தால் சமப்படுத்தி காட்டும். பத்தினி, காதல் பெண்கள் புகாரை சம அளவில் விசாரிக்கும். இது சரியா? நீதிமன்றத்தில் செங்கோல் நிறுவ வேண்டும்.


Kasimani Baskaran
மே 30, 2024 15:29

பணியிலிருக்கும் இராணுவ வீரர்கள் மீது வழக்குப்போட மாநில காவல்த்துறைக்கு அதிகாரம் கிடையாது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி