உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாத 16 லட்சம் குழந்தைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாத 16 லட்சம் குழந்தைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலமாக சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருக்கும் நைஜீரியாவில் 21 லட்சம் குழந்தைகள் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாமல் இருக்கின்றனர்.இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து எத்தியோப்பியா, காங்கோ, சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் 20 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 10வது இடத்திலும், சீனா 18வது இடத்திலும் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ல் இந்தியாவின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 2021ல் நாட்டில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 27.3 லட்சமாக இருந்தது. 2021ல் கணக்கிடப்பட்ட தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உள்பட 20 நாடுகளில் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் சற்றுதான் முன்னேற்றம் கண்ட நிலையில், இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஜூலை 17, 2024 15:28

இதே போலத்தான் உறுப்பு தானமும் ...... உறுப்பு தானம் நாங்கள் செய்யக்கூடாது .... ஆனால் உறுப்பு தானத்தை ஏற்பதில் தடை இல்லை .....


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 11:23

தடுப்பூசியை மறுக்க மார்க்கமே காரணம் .... இதுவே நோய் பரவ ஏதுவாகும் ......


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 10:56

நிடி ஆயோக் அளித்த பொருளாதார அறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளதாம். தமிழகத்தைச் சேர்ந்த சில புல்லுருவிகள் சமூக வலைத்தளங்களில் தடுப்பூசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதால் மக்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது. வாக்குவங்கி அரசியலுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மென்மையான அணுகுமுறை தவறு.


Apposthalan samlin
ஜூலை 17, 2024 12:43

காெரோணா தடுப்பூசி தான் சைடு effect .குழந்தைகளுக்கு தடுப்பூசி கண்டிப்பா போட வேண்டும் .தென் இந்தியா மக்கள் எல்லோரும் போட்டு இருப்பர்கள் .வட இந்தியா மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2024 14:44

தவறு அப்போஸ்தலன் அவர்களே, இங்கே கருநாடகத்தில் நான் வாழும் கிராமத்தில் மார்க்கத்தின் குடும்பங்கள் தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை எதிர்க்கிறார்கள், இதனை நான் கண்ணார கண்டுள்ளேன், மக்கள் தாங்களாகவே முன்வந்து இது போன்ற முக்கியமான விஷயங்களை ஆதரிக்க வேண்டும், கட்சி மதம் கடந்து அவர்கள் இருந்திருந்தா இவ்வளவு சிக்கல்கள் இல்லை


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 17, 2024 15:13

அப்பொ சுடாலினுக்கு நாரசொலியைத் தவிர வேற உலகமே இல்ல ......


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ