உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசூதி விழாவில் வி।பரீதம்; யானை தாக்கி 17 பேர் காயம்

மசூதி விழாவில் வி।பரீதம்; யானை தாக்கி 17 பேர் காயம்

மலப்புரம் : கேரளாவில், மசூதி விழாவில் பங்கேற்ற யானை திடீரென மிரண்டு அங்கிருந்த ஒருவரை அலேக்காக துாக்கி வீசியது. அப்போது ஏற்பட்ட நெரிசலில், 17 பேர் காயம் அடைந்தனர்.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் மசூதியில், நேற்று முன்தினம் இரவு திருவிழா நடந்தது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு விழாவில் பங்கேற்றன. அப்போது, அங்கிருந்த ஸ்ரீகுட்டன் என்ற யானை மிரண்டு கூட்டத்துக்குள் புகுந்தது. அங்கு சிக்கிய ஒருவரைப் பிடித்து, அலேக்காக துாக்கி தலைகீழாக வீசியது. இதில் அந்த நபர் காயம் அடைந்தார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். யானை மிரண்டதை அடுத்து பீதியடைந்த மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின் யானையை பாகன் கட்டுக்குள் கொண்டு வந்ததால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜன 09, 2025 06:13

மசூதி விழாவில் யானை உடணும்னு எந்த பொஸ்தகத்தில் போட்டிருக்கு? உட்டா திருமன்ஹ்சனம்.கூ பண்ணுவீங்க போலிருக்கே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை