| ADDED : பிப் 12, 2024 06:45 AM
ஹலசூரு: பெங்களூரு ஹலசூரில் உள்ள, பான் பெருமாள் கோவிலில், வரும் 17, 18ம் தேதிகளில் 12 ஆழ்வார்கள் பிரதிஷ்டை மஹா உற்சவம் நடக்கிறது.பெங்களூரு ஹலசூரு மார்க்கெட் பஜார் தெருவில், பான் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வரும் 17, 18ம் தேதிகளில் 12 ஆழ்வார்களின் அலங்கார பிரதிஷ்டை மஹா உற்சவம் நடக்கிறது. வரும் 17ம் தேதி மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, விஸ்வக்சேனர் ஆராதனை, புன்யாஹவசனம், பஞ்சகாவ்ய திருமஞ்சனம், பிராண பரிஷ்டை ஹோமம், மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, சாத்துமுறை நடக்கிறது. அதன்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் நடக்கிறது.வரும் 18 ம் தேதி காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, நாலாயிர திவ்ய பிரபந்த சேவகம், 12 ஆழ்வார்களின் அருள்பாட்டு, சாத்துமுறை, ஆரத்தி, தீர்த்தம், தடியாராதனை நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்குமாறு கோவில் நிர்வாகத்தினர் கேட்டு கொண்டு உள்ளனர்.