மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
2 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
2 hour(s) ago | 1
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
2 hour(s) ago
ஹூப்பள்ளிலிருந்து அயோத்திக்கு 1,800 கிலோ மீட்டர் துாரம் பாதயாத்திரையாக ராம பக்தர் சென்று உள்ளார்.கர்நாடகாவின் ஹூப்பள்ளியை சேர்ந்தவர் மனோஜ், 27. தீவிர ராம பக்தர். ராமர் கோவில் திறப்பை ஒட்டி, அயோத்திக்கு பாதயாத்திரையாக செல்வதாக கூறி இருந்தார். அதன்படி கடந்த மாதம் 22ம் தேதி, ஹூப்பள்ளியில் இருந்து அயோத்திக்கு பயணத்தை ஆரம்பித்தார். 30 நாட்களுக்கு பின்பு, அயோத்தியை நேற்று சென்றடைந்தார்.அயோத்தியில் பக்தி பரவசத்துடன் மனோஜ் கூறியதாவது:நான் தீவிர ராம பக்தன். பல போராட்டங்களுக்கு பின்பு, ராமர் கோவில் திறக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராமரை பார்க்க ஹூப்பள்ளியில் இருந்து அயோத்திக்கு 1,800 கிலோ மீட்டர் பாதயாத்திரையாக வந்து உள்ளேன்.பயணத்தை ஆரம்பித்த 2 நாட்களில், ரொம்ப கஷ்டமாக இருந்தது. ராமரை பெயரை உச்சரித்து கொண்டே, எனது பாதயாத்திரையை தொடர்ந்தேன். காலில் தோல் உரிந்து, காயம் வந்த போதும் என் பயணம் நிற்கவில்லை. தினமும் 50 முதல் 60 கிலோ மீட்டர் பயணித்தேன்.ராம பக்தர்கள் எனக்கு உணவு, தங்குமிடம் அளித்தனர். பெட்ரோல் பங்க், விடுதிகளில் தங்கினேன். கோவில் திறப்பு விழா அன்று, ராமரை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளேன். வி.ஐ.பி.,க்கள் வருவதால், பொதுமக்களை இங்கிருந்து அனுப்ப உள்ளனர். ஆனால், எப்படியாவது ராமரை பார்த்து விடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.
2 hour(s) ago
2 hour(s) ago | 1
2 hour(s) ago