உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிராம காவலர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்

கிராம காவலர்கள் 2 பேர் சுட்டுக்கொலை; ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கிராமப் பாதுகாவலர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஒமர் அப்துல்லா இருந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த சில தினங்களாகவே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவதும், கொல்வதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரை பூர்வீகமாக கொள்ளாத, வெளிமாநில மக்களை தொடர்ந்து கொன்று குவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப் பாதுகாவலர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி, சுட்டுக்கொன்றுள்ளனர். முன்ஷ்லா தார் வனப்பகுதியில் வைத்து நஷிர் அகமது மற்றும் குல்தீப் குமார் ஆகியோரை கடத்திய பயங்கரவாதிகள், அவர்களை சித்ரவதை செய்து, சுட்டுக் கொன்றுள்ளனர். இது தொடர்பான போட்டோக்களை எடுத்தும் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனிடையே, கிராமப் பாதுகாவலர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துணைநிலை கவர்னர் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸ், பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Balaji Radhakrishnan
நவ 08, 2024 17:51

We need a separate satellite to monitor Jammu


vijai hind
நவ 08, 2024 17:28

ஜனாதிபதி ஆட்சி தேவை


Amar Akbar Antony
நவ 08, 2024 12:22

மரத்தை அதுவும் ஆழ மராத்தி வெட்டிய பின்னர் நிழலுக்கு அழவேண்டியதுதான் கொண்டுவந்து கொன்டுவந்து வைத்தீர்களே அப்துல்லாஹ் கூட்டணியினய் அனுபவிப்பீர்கள் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானியர்களே


karthik
நவ 08, 2024 11:42

அவர்களை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லாதீர்கள் பிறகு இங்குள்ள திராவிட கும்பல் மற்றும் அதன் கூட்டாளிகள் முஸ்லீம் கட்சிகளுக்கு கோவம் வரும்


shyamnats
நவ 08, 2024 10:38

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தான் வன்முறை கட்டுப்பாடற்று அவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. முறையான தேர்தலுக்கு பின், தேச நலனுக்கு எதிராக 370 வது சாரத்தை நீக்கியதை எதிர்த்து, காஸ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதே நன்றாக தோன்றவில்லை. மத்திய அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மோகனசுந்தரம்
நவ 08, 2024 10:19

நம்முடைய உச்ச நீதிமன்றத்தை ....


JeevaKiran
நவ 08, 2024 09:59

பேசாமல் ஜம்முவின் போலீஸ் அமைப்பை பாதுகாப்பு கருதி மத்திய அரசாங்கமே பார்த்து கொள்ளட்டுமே? டெல்லியில் உள்ளது போல்.


xyzabc
நவ 08, 2024 09:54

ஆட்சி நடத்தும் இண்டி கூட்டணி ஏதேனும் செய்யுமா ? பப்பு ஏன் வாய் திறக்கவில்லை ?


புதிய வீடியோ