உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கையில் காசு இல்லை; எங்களால் எதுவுமே செய்ய முடியல: காங்கிரஸ் தலைவர்கள் புலம்பல்

கையில் காசு இல்லை; எங்களால் எதுவுமே செய்ய முடியல: காங்கிரஸ் தலைவர்கள் புலம்பல்

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், 'கையிருப்பில் பணமில்லாததால், எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை' என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சி 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால், ரூ.210 கோடி அபராதமும் விதித்த வருமான வரித்துறை, இதற்காக, காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளை முடக்கியது. இது தொடர்பாக இன்று (மார்ச் 21) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எம்.பி.,க்கள் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

கார்கே:

மத்திய பா.ஜ., அரசு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் அதிக நிதியை பெற்றுள்ளது. லோக்சபா தேர்தல் நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடைபெற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் பிற தன்னாட்சி அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது. அவற்றை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். எந்தெந்த நிறுவனங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றார்கள் என்பதை பா.ஜ., பகிரங்கமாக வெளியிட வேண்டும். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் எதிர்க்கட்சியான காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சோனியா:

இது காங்கிரசை மட்டும் பாதிக்கவில்லை; நாட்டின் ஜனநாயகத்தையும் பாதிக்கும். காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்குவதற்கு பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலிக்கப்படுகிறது. எங்கள் கணக்குகள் முடக்கப்பட்டு, பலவந்தமாக பணம் பறிக்கப்படுகிறது.இருப்பினும், சவாலான சூழ்நிலையிலும், எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை திறம்பட தக்கவைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஒருபுறம், தேர்தல் பத்திர விவகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ராகுல்:

இது காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்தின் முடக்கமும் தான். மிகப் பெரிய எதிர்க்கட்சியான எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. எங்களால் எந்த விளம்பரமும் கொடுக்க முடியவில்லை, எங்கள் தலைவர்களை எங்கேயும் அனுப்ப முடியவில்லை. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இந்த நடவடிக்கை தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தேர்தலில் போட்டியிடுவது பாதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் ஒரு மாதத்தை இழந்துவிட்டோம். எங்கள் கட்சி மீது நடத்தப்பட்ட கிரிமினல் தாக்குதல். இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற கருத்தியல் இப்போது பொய்யாக்கப்பட்டுள்ளது. நாட்டில் எங்களுக்கு 20 சதவீத ஓட்டுகள் உள்ளன. எங்களால் தேர்தல் செலவுக்கு 2 ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை. தேர்தலில் எங்களை முடக்க திட்டமிட்டுள்ளனர். தேர்தல் செலவுக்கு பணமில்லாததால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

A1Suresh
மார் 21, 2024 22:18

கறுப்பு பணம், சுவிஸ் வங்கிகளில் உங்களுக்கு இல்லாததா ? பல லட்சம் கோடிகள்


panneer selvam
மார் 21, 2024 22:08

Kharge ji , do not worry , just dial to Stalin ji , all your financial problems will be squared off His collection agents TRBalu at Delhi and Durai Murugan at Chennai have done good job and d a war chest


Chandhra Mouleeswaran MK
மார் 21, 2024 19:55

ஏனு ஸ்வாமி பொய்யி மாத்தாடுதிரி? ஒங்க இத்தாலித் தாய்க்குலத்தம்மா சுருக்குப் பையிலயே மூணு லச்சம் கோடி பணம் இருக்குதில்லே? அதுபோக ராவுல் வின்ஸியோட சீன தோஸ்த்துக, இத்தாலிச் சொந்தங்க, கனடாக் காலிஸ்தானிப் பங்காளிக அப்ரம் கஷ்மீரி பாய் கேரள பாய் ஃப்ரண்டுக அல்லாருடைய கணக்கிலும் இருக்கர பத்தாயரம் கோடி, லச்சம் கோடி பணம் எல்லாம் என்னா ஸ்வாமி பண்ணுது? அள்ளி உருங்க ஸ்வாமி


VENKATASUBRAMANIAN
மார் 21, 2024 18:26

உங்கள பெயரில் எவ்வளவு சொத்து உள்ளது மோடி பாராளுமன்றத்தில் கார்கே விடம் கேட்டார் அது எப்படி வந்தது ராகுல் குடும்பம் எவ்வளவு சொத்து வைத்துள்ளது மக்களுக்கு தெரியும் நீலிக்கண்ணீர் வேண்டாம்


Godfather_Senior
மார் 21, 2024 17:59

Half of their black money was seized by the agencies in multiple raids and rest half was already taken away to foreign countries through havala transactions And now, for not paying the tax since , their accounts are frozen Yet, no worry for them as they have many allies to borrow money from like drug scandal DMK, multiple scandal marvels Sharad dadas NCP etc


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ