மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
1 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago
லக்னோ: உத்தர பிரதேசத்தில் குளத்தில் டிராக்டர், கவிழ்ந்ததில், ஏழு குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உ.பி., மாநிலம் எட்டவா மாவட்டத்தில் உள்ள ஜெய்தாரா பகுதியைச் சேர்ந்த 40 பேர், டிராக்டரில் கங்கை ஆற்றில் புனித நீராட சென்றனர். காஸ்கஞ்ச் மாவட்டம் பதியாலி - தர்யாகஞ்ச் சாலையில் நேற்று காலை சென்றபோது, மற்றொரு வாகனத்தை டிராக்டர் முந்த முயன்றது. அப்போது சாலையோரத்தில் இருந்த 8 அடி ஆழ குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து, நீரில் மூழ்கியது. இதில் ஏழு குழந்தைகள், எட்டு பெண்கள் என மொத்தம் 22 பேர் பலியாகினர். 16 பேர் காயம் அடைந்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களது அடையாளத்தை போலீசார் கண்டறிந்து, உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.விபத்து பற்றி அறிந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago