உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2200 பணியிடங்களுக்காக குவிந்த 25 ஆயிரம் இளைஞர்கள்: கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு

2200 பணியிடங்களுக்காக குவிந்த 25 ஆயிரம் இளைஞர்கள்: கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் உள்ள 2,216 காலி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுக்காக சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் ஒன்றாக கூடி முண்டியடித்ததால் பலரும் நெரிசலில் சிக்கி தவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=va8qoi45&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாட்டில் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. இதனால் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி அவ்வப்போது குரல் எழுப்புகின்றன. சமீபத்தில் குஜராத்தில் 10 காலி பணியிடங்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய காட்சிகள் வைரலானது. அந்த வகையில், தற்போது மும்பையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் பங்கேற்க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விமான நிலையத்தில் பயணிகளின் லக்கேஜ்ஜை கையாள்பவர்கள் உள்ளிட்ட 2,216 பணியிடங்களுக்காக நேர்முகத்தேர்வு நடத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. அவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்க சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் கையில் சான்றிதழ்களுடன் மும்பை விமான நிலையத்தில் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் வேலைத்தேடி வந்த இளைஞர்கள் சிக்கித்தவித்தனர். அனைவரையும் நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ள செய்வது கடினம் என்ற நிலையில், இளைஞர்கள் தங்களின் சுய விவரங்களை (ரெஸ்யூம்) பெட்டியில் போட்டுச் செல்லுமாறு விமான நிறுவனம் அறிவுறுத்தியது. நேர்முகத்தேர்வுக்கு திடீரென 25 ஆயிரம் இளைஞர்கள் அங்கு கூடியதால் அந்த இடமே பரபரப்பானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

great kamesh single man
ஜூலை 18, 2024 06:50

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலையில்லாத சூழலில் தன் குடும்பத்தை விட்டு தமிழகத்தில் வந்து ஓட்டல், கட்டிடங்கள் வேலை , பாணி பூரி கடைகள் போன்ற தனியார் நிறுவனங்கள் பணிப்புரிந்து வருகின்றன வீதி வீதியா சென்று கம்பளி, தலையணை உறை விற்பனை வந்த வீடுகளில் உள்ள தங்கம், நகை இருக்கிறதா என்று கண்காணித்து இரவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பல்வேறு இளைஞர்கள் வேலையில்லாத திண்டாட்டம் அதிகமாக உள்ளது 2019 பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவித்து விட்டு இளைஞர்களை, மாணவர்களை இழிவு படுத்துவது போன்ற அதிகார தூஷ்பயோகம் செய்யும் பாஜக ஆட்சியாளர்கள் தன் அராஜக போக்கை கையாண்டுள்ளார் 2024 பாஜக தேர்தல் அறிக்கை இளைஞர்கள் நலன் மாணவர்கள் நலன் சமந்தப்பட்ட நலன் சார்ந்த அறிவிப்புகளை பாஜக அறிவிக்கவில்லை பட்டம் பெற்ற இளைஞர்கள், மாணவர்கள் மோடி அரசு வஞ்சிக்கிறது


அம்பி
ஜூலை 17, 2024 19:31

ரெண்டு கோடி வேலை குடுக்குறோம் ஹைன். எல்லோரும் டில்லிக்கி போங்கோ ஹைன். அங்கே புடிக்கலின்னா உ.பி ல கொடுக்குறோம் ஹைன்.


Subash BV
ஜூலை 17, 2024 18:42

Someone playing games. INVESTIGATE. PUT THE BHARATH FIRST.


இளந்திரையன் வேலந்தாவளம்
ஜூலை 17, 2024 14:27

நோகாமல் நோம்பி கும்பிடணும்... லஞ்சபணத்தில் சுகபோகமாக இருக்கணும்.. வரதட்சிணை நெறய வேணும்னா அரசாங்க உத்யோகம் தேவை என்ற எண்ணமே இவ்வளவு கூட்டத்திற்கு காரணம்


GMM
ஜூலை 17, 2024 13:57

நிறுவன அதிகாரியின் பொறுப்பற்ற செயல். முன்பு சுய விவர மனு தாக்கல் செய்ய விளம்பரம் மூலம் கூறுவர். அதில் தணிக்கை செய்து, பகுதி பகுதியாக அழைத்து நேர்முக தேர்வு காண்பர். அதில் வடிகட்டி, தகுதியான நபருக்கு வேலை தருவர். அதற்கு முன் முக்கிய பணிக்கு குடும்ப பின்புல விவரம் சேகரிப்பர். காங்கிரஸ், திமுக அரசு பணியில் சமத்துவம் பேசும். கட்சி பணியில் வன் திறமை அடிப்படை. கட்சி நிறுவனங்கள் பணியில் முழு திறமை அடிப்படை. வேலை இல்லா நிலவரம் தெரியாமல் கூட்டம் கூட்டியது தவறான செயல். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


VV.Manivannan
ஜூலை 17, 2024 13:38

விவசாயத்திற்கு ஆள்கள் கிடைப்பதில்லை மற்ற வேலைகளுக்கு வருகிறார்கள் இதை வைத்துக்கொண்டு வேலைவாய்ப்பு இல்லை என்பது சரியல்ல


Apposthalan samlin
ஜூலை 17, 2024 12:50

பிஜேபி ஆட்சி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 13:04

முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆளே வராமல் ஈ மொய்த்துக் கொண்டிருந்ததா? தமிழக குரூப் 4 எத்தனை லட்சம் பேர் எழுதியனர்? மாநில அரசு வேலைவாய்ப்பு குறைந்தது ஏன்?


J.Isaac
ஜூலை 17, 2024 13:33

இப்படி வக்காலத்து வாங்கி தயவுசெய்து மக்களை வஞ்சிக்காதீர்கள்


S. Narayanan
ஜூலை 17, 2024 12:19

ஆன்லைன் டெஸ்ட் வைக்கலாமே


Karuthu kirukkan
ஜூலை 17, 2024 13:56

உண்மை தான் வைக்கலாம் ஆனால் ..வேலை வாங்குறதுக்கு பண பட்டுவாடா... எப்புடி ஒன்லைன் கண்டுபிடுச்சுருவாங்களே..ஐயோ ஐயோ இன்னும் சின்னப்பிள்ளையாவே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை