உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது

வயநாட்டில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள்: விமானப்படையும் உதவுகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: கேரளாவில் நிலச்சரிவில் 41 பேர் பலியான நிலையில் மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தில் , 4 மணி நேரத்தில் அடுத்தடுத்து முண்டக்கை, மெப்பாடி உள்ளிட்ட 3 இடங்களில் கடுமையான 3 நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.நிலச்சரிவு ஏற்பட்ட உடன் உடனடியாக ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதனையடுத்து காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த 225 பேர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மருத்துவ அதிகாரிகள் குழு தலைமையில், 40 பேர் அடங்கிய குழவினர் மீட்பு பணிக்கு உதவுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். குன்னூர் கண்டோன்மென்டில் இருந்தும் இரண்டு குழுவினர் வயநாடு விரைந்து உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இதனிடையே, விமானப்படைக்கு சொந்தமான ஏஎல்எச் மற்றும் எம்ஐஐ 7 ஹெலிகாப்டர்களும், சாரங் வகை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் முன்னின்று உதவி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூலை 30, 2024 11:30

ஜாதி மதம் பற்றி பொய் சொல்லி வாக்குகளைப் பெற்று வென்றவரது ஹராம் ஊரையே பாதிக்கிறது. இனியாவது நல்ல இந்தியர்களுக்கு வாக்களித்து புண்ணியம் தேடுங்கள் .


Ramesh Sargam
ஜூலை 30, 2024 11:28

இது ஒரு natural disaster. ஆகையால் இதைவைத்து எதிர்க்கட்சியினர், குறிப்பாக கம்யூனிஸ்ட்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்யவேண்டாம். முடிந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்யவும். இல்லையென்றால் வாயை பொத்திக் கொண்டு இருக்கவும். மத்திய அரசு பார்த்துக்கொள்ளும்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை