உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாத 26 லட்சம் வாக்காளர்கள் பெயர்: மே.வங்கத்தில் அதிர்ச்சி

2002 வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகாத 26 லட்சம் வாக்காளர்கள் பெயர்: மே.வங்கத்தில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில்(எஸ்ஐஆர்), 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு அவர் கடிதம் எழுதி வருகிறார்.இந்நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 26 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், 2002 ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப்போகவில்லை என்பது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் இதுவரை 6 கோடி படிவங்கள் விண்ணப்படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு, முந்தைய எஸ்ஐஆர் பணியுடன், தற்போதைய பட்டியல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் 26 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் ஒத்துப்போகவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடர்ந்து நடப்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சாமானியன்
நவ 27, 2025 20:31

ராகுல் ஓட் சோர் என்று பீகார் தேர்தலின் போது புலம்பல். சரியாகத்தான் சொன்னார். இது மெல்ல மெல்ல நிருபணம் ஆகின்றது. மம்தா தேசதுரோக காரியங்களை கமுக்கமாக செய்கிறார். புதிது புதிதா ரூம் போட்டு யோசித்து சிறுபான்மையரை திருப்திப்படுத்த விஷமத்தனமாக செய்கிறார்கள். இவர்களது சித்தாந்தம் .. வந்தவரை லாபம். இவர்கட்கும் ஓட்டுப் போடுகிறார்களே மக்கள். அவர்களை என்னவென்று சொல்ல. சிறுபான்மையினரின் ஆதரவால் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் இவர்கள் தாரக மந்திரம் இலவசம். நாடு எக்கேடு கெட்டால் என்ன ? ஊழல் அரசுகளை டிஸ்மிஸ் செய்ய உச்சநீதிமன்றமும், மத்திய அமைச்சர் அவையும் ஏதாவது செய்ய வேண்டும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 27, 2025 19:52

எந்தா சாரே மனிசிலையோ manisilaayo


nagendhiran
நவ 27, 2025 19:36

பங்கலாதேஷ் போன்ற அருகில் இருக்கும் நாட்டில் ஒப்பிட்டு பார்த்தால் பொருந்தும்?


GMM
நவ 27, 2025 19:30

மம்தா பானர்ஜி எதிர்க்க காரணம் புரிகிறது. திருடனுக்கு தேள் கொட்டியது போல் மம்தா எப்போதும் உழண்டு வந்தார். வீட்டில் தபால் துறை போல் கையில் கொடுத்தும் பூர்த்தி செய்த பாரம் 1 மாதத்தில் கொடுக்க முடியாது? ஆனால் சுமார் 8 மணி நேரத்தில் வாக்கு சாவடி தேடி ஓட்டு போட முடியும். என்ன மர்ம கதை. சார் நடவடிக்கை நல்ல வாக்காளர் நல்ல வேட்பாளரை உருவாக்குகிறது. தேர்தல் ஆணையம் ஆதரவாக எதிர் வழக்கு தொடுக்க வேண்டும்.


MARUTHU PANDIAR
நவ 27, 2025 18:52

அந்த தலைவியை வீட்டுக் காவலில் வைத்து விட்டு பிறகு எஸ்.ஐ.ஆர். பணியை தொடர்ந்து மேற்கொள்வது ஒன்றே பீகார் அளவுக்கு வாக்காளர் பட்டியலை திருப்தியாக சுத்தப் படுத்த முடியும். இல்லையேல் பிறரை அளவில் திட்டமிட்டு பணியை முடக்குவார். மத்திய ஆயுதப் படையை கணிசமாக பயன் படுத்த வேண்டும். ஆமாம். அது ஒரு வெறியில் இருக்கும் குரூப்பு. எதை வேண்டுமென்றாலும் செய்யும்.


இளந்திரையன் வேலந்தாவளம்
நவ 27, 2025 18:50

SIR படிவத்தில் பகுதி 1,2,


ராமகிருஷ்ணன்
நவ 27, 2025 18:33

அவ்வளவு பேரும் வங்கதேச ரேங்கியா கும்பல், மம்தா தயார் செய்த கள்ள ஓட்டு மத்திய அரசு சிறிதும் தயங்காமல் விரட்டி விட வேண்டும். மம்தா எதிர்த்தால் அவரையும் திஹாரில் அடைத்து விடலாம்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி