உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 26 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டம்

26 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டம்

பெங்களூரு: பெங்களூரில் உற்பத்தியாகும் கழிவு நீரை சுத்திகரித்து, மறு சுழற்சி செய்யும் நோக்கில், 470 எம்.எல்.டி., திறன் கொண்ட, 26 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.இது குறித்து பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:பெங்களூரில் உருவாகும் 2,255 எம்.எல்.டி., கழிவு நீரை சுத்திகரித்து, மறு சுழற்சி செய்வது, குடிநீர் வாரியத்தின் நோக்கமாகும். 470 எம்.எல்.டி., திறன் கொண்ட 26 கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. தற்போது பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டு இறுதியில் செயல்பட துவங்கும்.தற்போது உள்ள கழிவு நீர் சுத்தகரிப்பு மையங்கள், சிறப்பாக செயல்படுகின்றன. மத்திய அரசும் இதனை அடையாளம் கண்டுள்ளது. 23 கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு, 'பைவ் ஸ்டார் ரேட்டிங்' அளித்துள்ளது. மற்றவை நான்கு ஸ்டார், மூன்று ஸ்டார் பிரிவில் சேர்ந்துள்ளன. எஸ்.டி.பி.,க்களை சிறப்பாக நடத்த, குடிநீர் வாரியத்துக்கு மத்திய அரசு 103 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியது.சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்தும்படி, ஐ.டி., பார்க்குகளில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய நீரை கட்டட கட்டுமானம், வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும்.சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், ஏரிகளில் பாய்ச்சப்படுகிறது. இவ்விஷயத்தில் பெங்களூரு குடிநீர் வாரியம், நாட்டுக்கு முன் மாதிரியாக உள்ளது. நகரின் உள்ளேயும், வெளியிலும் உள்ள ஏரிகளை நிரப்ப 80 சதவீதம், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பயன்படுத்தப்படுகிறது. இது நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க உதவுகிறது. கப்பன் பூங்கா, ராஜ்பவன், அரசு அலுவலகங்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் பயன்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ