மேலும் செய்திகள்
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி
1 hour(s) ago
பிரபல ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார்
2 hour(s) ago | 10
கவுகாத்தி: கவுகாத்தியில் நடைபெறும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்ஸின் தென் ஆப்ரிக்க அணி, 489 ரன்கள் சேர்த்தது.அதனையடுத்து ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய தரப்பில் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 58 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் சேர்த்தனர். மற்றவர்கள் தென் ஆப்ரிக்க அணியின் புவுலர்களுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.மார்கோ ஜேன்சென் அசத்தல்:தென் ஆப்ரிக்க பவுலர் மார்கோ ஜேன்சென் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தென் ஆப்ரிக்க அணி, 288 ரன்கள் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்ஸை தொடங்கியது.3வது நாள் ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 2வது இன்னிங்ஸில் 26 ரன்கள் சேர்த்து, 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
1 hour(s) ago
2 hour(s) ago | 10