உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் தாக்குதல் 3 பேர் பலி; 23 பேர் காயம்

பயங்கரவாதிகள் தாக்குதல் 3 பேர் பலி; 23 பேர் காயம்

கந்தர்பால் : ஜம்மு - காஷ்மீரில் உள்ளூர் மக்கள் அல்லாதோரை குறிவைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று வெளி மாநில தொழிலாளர்கள் பலியாகினர்; 23 பேர் படுகாயமடைந்தனர்.ஜம்மு - காஷ்மீரில் கந்தர்பால் மாவட்டத்தின் ககங்கீர் பகுதியில் அரசு சார்பில் கட்டுமான பணி நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் அல்லாத வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று திடீரென இந்த தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தப்பியோடினர்.இதில், மூன்று தொழிலாளர்கள் பலியாகினர். படுகாயமடைந்த 23 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே, இத்தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் துணை இயக்கமான, 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல் நிகழாமல் இருந்த இப்பகுதியில், நேற்று முதன்முறையாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி