உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேலும் 3 துணை முதல்வர்கள் பதவி : சித்தராமையாவுக்கு நெருக்கடி

மேலும் 3 துணை முதல்வர்கள் பதவி : சித்தராமையாவுக்கு நெருக்கடி

பெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 3 துணை முதல்வர்கள் பதவிகேட்டு காங், முதல்வர் சித்தாமையாவுக்கு நெருக்கடிகொடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் காங்., முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில் பல்வேறு சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வீர சைவ லிங்காயத், மற்றும் எஸ்.சி./ எஸ்.டி. சமூகத்தினருக்கு இல்லை.எனவே மேலும் 3 முதல்வர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கடந்தமூன்று மாதங்களுக்கு முன் கர்நாடகா கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜன்னா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் முடிந்ததும் பரசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இக்கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து சித்தராமையா கூறுகையில், மேலும் 3 முதல்வர்கள் நியமன விவகாரத்தில் மேலிடம் தான் முடிவு செய்யும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 16:19

துணை ஒன்று போதும். வேண்டுமென்றால் இணை முதல்வர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ெல்லியில் பிணை முதல்வர்தான் ஆட்சி புரிகிறார்)


Ramesh Sargam
ஜூன் 27, 2024 13:35

பேசாம ஒரு முதல்வர், மற்றவர்கள் எல்லாம் துணைமுதல்வர்கள் என்று அறிவித்துவிடுவது சிறப்பாக இருக்கும். என்னதான் பதவி கொடுத்தாலும், அவர்கள் என்னவோ செய்யமாட்டார்கள். அவர்கள் செய்வது dirty politics. அதற்கு எந்த பதவியா இருந்தால் என்ன?


Lion Drsekar
ஜூன் 27, 2024 12:17

எங்கேயாவது ஒருநாள் ஒரு செய்தி மக்களுக்காக, நாட்டுக்காக ..? வந்தே மாதரம்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 10:45

முஹம்மது பின் துக்ளக் திரைப்படம் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கணித்த திரைப்படம் ...


saravan
ஜூன் 27, 2024 10:41

வெற்றிபெற்ற எல்லோருக்கும் துணை முதல்வர் கொடுங்க ஓட்டு போட்டவன் நாண்டுக்கிட்டு சாகனும்.


duruvasar
ஜூன் 27, 2024 09:19

ஊழல் வழக்கில் சிக்கியிருக்கும் அமைச்சரை பதவியிலிருந்து எடுக்க சொன்னால் அமைச்சர்களை பணியில் அமர்த்துவதும் விலக்குவதும் முதலமைச்சரின் தனிபட்ட உரிமை என நீதிமன்றங்களில் வாதம் வைப்பது உண்மையானால் இங்கே எப்படி மேலிடம் இவைகளை முடிவு செய்கிறது. மேலிடத்திற்க்கு இந்த உரிமை அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா? இந்த லட்சனத்தில் இவனுங்க அரசியல் சாசனத்தை காக்க போரானுங்களலாம். கேக்கரவன் கேனையனாக இருந்தால் .............


Kumar Kumzi
ஜூன் 27, 2024 08:25

புள்ளி கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும் தினமொரு பதவி தண்டை நடைபெறும்


Ms Mahadevan Mahadevan
ஜூன் 27, 2024 07:05

இதுக்குதான் மேலிடத்தில் இருந்து தினிக்கப்படாமல் எம் எல் ஏ இக்கள் தேர்தெடுக்க வேண்டும் அந்த ஜனாயக முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்


வாய்மையே வெல்லும்
ஜூன் 27, 2024 07:02

ராவுலு வேலையில்லாம சும்மாதான் இருக்காரு அவரை வேண்டும் என்றால் துணை முதல்வர் பிரியங்கா இணை முதல்வர் .. வாடேற குறுங்கால மன்னர், அவர் வீடு பிள்ளைகள் கார்ப்பரேஷன் வார்டு மெம்பெர் போஸ்ட் குடுத்து கர்நாடகா அழகு பார்க்கலாமே


Indhuindian
ஜூன் 27, 2024 06:51

கேபினட் மீட்டிங்கில் சோவோட முகம்மது பின் துக்லக் படத்தை சப் டைடலோட போட்டு காட்டுங்க அப்புறம் எல்லாம் சரியாபூடும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை