உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி.,யில் பஸ் - கார் மோதல் குழந்தை உட்பட 3 பேர் பலி

உ.பி.,யில் பஸ் - கார் மோதல் குழந்தை உட்பட 3 பேர் பலி

பிரதாப்கர்:உத்தர பிரதேசத்தில், பஸ் மீது கார் மோதி 6 வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த இரு பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பிரயாக்ராஜில் இருந்து மன்கர் ஆசிரமத்துக்கு காரில் 5 பேர் சென்றனர். பிரயாக்ராஜ் - லக்னோ நெடுஞ்சாலையில் பிஷியாத் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, பஸ் மீது கார் மோதியது.காரில் இருந்த இரண்டு பெண்கள் உட்பட 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டனர். ஆனால், செல்லும் வழியிலேயே அனுஜ் கோஸ்வாமி,32, வைஷ்ணவி கோஸ்வாமி,25 மற்றும் குங்குன் கோஸ்வாமி,6 ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் அனிதா, 40 மற்றும் ட்விங்கிள், 25 ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை