உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார், பைக் மீது பஸ் மோதி பெண் உட்பட 3 பேர் பலி

கார், பைக் மீது பஸ் மோதி பெண் உட்பட 3 பேர் பலி

முசாபர்நகர்:டில்லி - -டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் பைக் மீது, உத்தராகண்ட் மாநில அரசு பஸ் மோதி, பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். டில்லியில் இருந்து நேற்று முன் தினம் இரவு சென்ற உத்தராகண்ட் மாநில அரசு பஸ், டில்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கட்டவுலி பைபாஸ் அருகே முன் னால் சென்ற கார் மற்றும் பைக் மீது மோதியது. காரில் இருந்த ராதிகா,24, பைக்கில் சென்ற அனு,21, ஆதித்யா,19, ஆகிய மூவரும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த அனுஜ் மற்றும் அவரது நான்கு வயது மகள் ஆராத்யா ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !