உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் வருத்தம்

நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வருவாயை பா.ஜ., இரட்டிப்பாக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை. கடந்த 2014ம் ஆண்டை விட விவசாயிகளின் கடன் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. பா.ஜ., கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 7.5 லட்சம் கோடி மதிப்பிலான தொழிலதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. பா.ஜ., நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளின் பங்கான ரூ.2700 கோடியை நிறுத்தி வைத்துள்ள தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ரூ. 40,000 கோடி லாபம் பார்க்கின்றன. முறையான குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததால் விலை உயர்ந்த உரங்கள் மற்றும் விதைகளை பெறுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் உள்ளது.விவசாய செலவுகளைக் குறைப்பதும், விவசாயிகளின் பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயிப்பது தான் காங்கிரசின் குறிக்கோள். விவசாயிகள் செழிப்படைய அவர்கள் பொருளாதாரத்தில் வளர்வதே வழி. நமது அரசு விவசாயிகளுக்கான அரசாக இருக்கும் தொழிலதிபர்களுக்கான அரசாக இருக்காது. இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MARUTHU PANDIAR
ஜன 31, 2024 13:39

டுபாக்கூர் ஆசாமிகள் பின்னால் ஒரு அடிமைக்கூட்டம் தலை ஆட்டிக்கிட்டு அலையுதே , இதுக்கு முடிவே கிடையாதா,,இந்த நாட்டுக்கு விமோசனமே இல்லையான்னு கேட்டு மக்கள் புலம்புறாங்களாம்.


raja
ஜன 31, 2024 13:03

எப்படி எல்லாம் பொய் பேசுறான் பாருங்க மக்கா..ஒரு நாளைக்கு 30 விவசாயி தற்கொலை என்றால் இந்நேரம் எவ்வளவு வரும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பொத்தாம் பொதுவாய் செரை வாரி இரைகிரான்...30X365X10 = 109500 பேர் தற்கொலை செய்து கொண்டது கணக்கு கொடு பப்பு புள்ளி விவரத்துடன்...


முருகன்
ஜன 31, 2024 13:33

உண்மையில் இவர் உண்மை விஷயத்தை சொன்னால் கூட சிலருக்கு புரியவில்லை அந்த அளவுக்கு நாட்டில் நடிப்பு அரசியல் நடக்கிறது


Sridhar
ஜன 31, 2024 12:58

விவசாய சீர்திருத்த சட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தா இந்நேரம் விவசாயிகள் வாழ்வு மிகமுன்னேற்றம் அடைந்திருக்கும். எங்க விட்டீங்க? 60 வருசமா ஆட்சியில இருந்தப்போ இதே விவசாயிகளுக்கு உங்க அரசாங்கம் என்ன செஞ்சுச்சு? அவங்களோட இந்த நிலைமைக்கு உங்க முன்னோர்கள் தானே முக்கியமான காரணம்? இந்த மாதிரி விவரங்களை எல்லாம் பேசக்கூடாதுங்கற சிறு அறிவு கூட உங்களுக்கு இல்லையே


Nalla
ஜன 31, 2024 12:53

ராகுல் காந்தியின் கூற்று உண்மையே, விவசாயிக்கான ஆதரவை பத்து ஆண்டுகளாக ப ஜ க ஆட்சி செய்யவில்லை


ராமன்
ஜன 31, 2024 13:55

சிங்கப்பூர் சென்றாலும் 200₹ அலைய வேண்டாம்


விஜய்
ஜன 31, 2024 14:24

வந்துட்டாரு உண்மைய பேச


saravan
ஜன 31, 2024 12:50

நாம பாதி நாள் இத்தாலி லதான் ஊர் சுத்துறோம்...


kuppusamy India
ஜன 31, 2024 12:36

தற்கொலை செய்து கொள்வது எப்படி ன்னு தெரியாது.... நீ பண்ணி காட்டு....


ஆரூர் ரங்
ஜன 31, 2024 12:25

உங்க காட்டாட்சியில் மஹாராஷ்டிரா தெலுங்கானா ஆந்திராவில் ஆண்டுக்கு லட்சம் பேருக்கு மேல் தற்கொலை????‍???? செய்து கொண்டது மறக்காது. இப்போ அப்படி ஒரு நிலைமையில்லை


மேலும் செய்திகள்





புதிய வீடியோ