உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 300 யூனிட் இலவச மின்சாரம்... சிலிண்டருக்கு ரூ.500 மானியம்; தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஹரியானா காங்கிரஸ்

300 யூனிட் இலவச மின்சாரம்... சிலிண்டருக்கு ரூ.500 மானியம்; தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஹரியானா காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளது.90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. கடந்த முறை 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்த பா.ஜ., இந்த முறையும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, கடந்த தேர்தலில் பா.ஜ.,வுக்கு அடுத்தபடியாக 30 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை எப்படியாவது, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று முயன்று வருகிறது. இந்த நிலையில், ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. பல்வேறு அம்சங்கள் அடங்கிய இந்த தேர்தல் வாக்குறுதியை, காங்கிரஸ் தலைவர் புபேந்தர் சிங் ஹூடா, முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் உதை பான் ஆகியோர் வெளியிட்டனர். தேர்தல் வாக்குறுதிகள்* வீடுகளுக்கு தலா 300 யூனிட் மின்சாரம் இலவசம்* ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ உதவி* மகளிருக்கு ரூ.2,000 உரிமைத் தொகை* கேஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம்* விவசாய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம்* விவசாயிகளுக்கு தனி ஆணையம் மற்றும் மானிய விலையில் டீசல் வழங்கப்படும்*ஏழை எளிய மக்களுக்கு 4.5 சென்ட் வழங்கப்படும்* பின்தங்கிய மக்களுக்கு இரு அறைகளுடன் கூடிய வீடு கட்டித் தரப்படும்.* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்* 2 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு*போதை இல்லா மாநிலம் உருவாக்கப்படும்* பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்*முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர்களுக்கு ரூ.6,000 ஊக்கத்தொகை, ஆகியவை இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 06:01

நாட்டினை சீரழிக்கும் இந்த இலவசங்கள் என்றால் மிகையாகாது


அப்பாவி
செப் 29, 2024 03:37

ஹரியானாவுல பூக்கட்சிக் காரங்க என்ன குடுக்கறாங்களாம்?


சந்திரசேகர்
செப் 28, 2024 21:16

ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய ஆசையை தூண்டி விடனும். இதுபோல் தான் ஆன்லைன் மோசடியும்


Gokul Krishnan
செப் 28, 2024 20:53

கர்நாடகவில் பதவிக்கு வந்த கேடு கெட்ட காங்கிரஸ் அனைத்து வரி பால் பேருந்து என ஒண்ணயும் விட்டு வைக்க வில்லை.விலை ,வரி என அனைத்தையும் ஏற்றியது தான் சாதனை. ஹரியானா மக்கள் சுதகரித்து கொள்ள வேண்டும்


Ramesh Sargam
செப் 28, 2024 20:02

கேக்கறவன் கேனப்பயலா இருந்தா, இன்னும் அதிகம் வாக்குறுதிகளை அள்ளிவிடுவாங்க...


S S
செப் 28, 2024 19:54

இதையே பிஜேபி கூறிய போது நீங்கள் எல்லாம் எங்கே போயிருந்தீங்க


Karthi
செப் 29, 2024 07:47

Enga elainnaga


M Ramachandran
செப் 28, 2024 19:32

அனுமான் இலங்கையில் அவுத்து விட்டதை விட நீட்டா ரீல் விடுறாங்க.


Karthi
செப் 29, 2024 07:47

Hanuman kumari sooldeer


அப்பாவி
செப் 28, 2024 18:53

ஏமாந்தாலும் பெருஸ்ஸ்ஸ்சா பாஞ்சி லட்சம் மாதிரி ஏமாறணும். ஹரியானா மக்களுக்கு லக்கி ப்ரைஸ்.


Rajan
செப் 28, 2024 18:52

ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரி குதிரையாக மாறி விடுவார்கள். இவர்களக்கு மக்களை பற்றியும் கவலை இல்லை, பொருளாதாரம் பற்றியும் புரிதலில்லை. அதிகாரம், பொருள் ஆதாரம் தான் முக்கியம்


raja
செப் 28, 2024 18:50

இந்தியாவை போன்டியாக்கும் வகையில் இந்த உலக புகழ் 2கி கொள்ளை கூட்டமான திருட்டு திராவிட தில்லுமுல்லு கழகமும் கான் கிராஸ்சும் வாக்குறுதிகளை அள்ளி வீசு கிறது. மக்கள் உணர்ந்து இந்தியாவை பொருளாதாரத்திலும் வெளியுறவு கொள்கையிலும் வல்லரசாக மாற்றிவரும் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் .... தமிழர்கள் இந்த கோவால் புற கொள்ளையர்களை அடித்து விரட்டவெண்டும்....


புதிய வீடியோ