மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
4 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
பெங்களூரு: போதைப் பொருட்களுக்கு எதிராக, போராட்டம் நடத்திய சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், 2023ல் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட, 3,000 பேரை கைது செய்தனர். 102 கோடி ரூபாய் மதிப்பு போதைப்பொருட்களை, பறிமுதல் செய்தனர்.பெங்களூரை போதைப்பொருள் இல்லாத நகராக்க, சி.சி.பி., போலீசார் உறுதி பூண்டுள்ளனர். அவ்வப்போது சோதனையிட்டு போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். பலரை கைது செய்கின்றனர்.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, போதைப் பொருள் புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால், ஹோட்டல், பப், ரெஸ்டாரென்டுகள் உட்பட, அனைத்து இடங்களிலும் தீவிரமாக கண்காணித்தனர்.போதைப் பொருள் வழக்கில், 2023 ஜனவரி முதல், டிசம்பர் வரை வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 3,000 பேர் கைதாகினர். 102 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில், 61 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 hour(s) ago | 1
4 hour(s) ago
5 hour(s) ago