உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அ னுமன் பஜனையில் 3,000 பெண்கள் பங்கேற்பு

அ னுமன் பஜனையில் 3,000 பெண்கள் பங்கேற்பு

பெலகாவி: ராமர் கோவில் திறப்பை ஒட்டி, கோகாக்கில் நடந்த அனுமன் பஜனையில், ஒரே நேரத்தில் 3,000 பெண்கள் பங்கேற்றனர்.பெலகாவி கோகாக்கில் ஹிந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் இணைந்து, அனுமன் பஜனையை நேற்று நடத்தினர். மகாலட்சுமி தேவி திருமண மண்டபத்தில் நடந்த பஜனையில் ஒரே நேரத்தில் 3,000 பெண்கள் பங்கேற்றனர். 108 முறை ராம மந்திரம் கூறினர்.திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, ராமர், சீதை, அனுமன் சிலைகளை வழிபட்டனர். இந்த பஜனையில் சிறுவர்கள் ராமர், அனுமன் வேடம் அணிந்தும், சிறுமிகள் சீதை வேடம் அணிந்தும் வந்திருந்தனர். இவர்களை பார்த்து பஜனையில் கலந்து கொண்டவர்கள் வியந்தனர். அவர்களுடன் சேர்ந்து மொபைல் போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை