மேலும் செய்திகள்
அர்பன் நக்சலைட்களின் நோக்கம் மாறி வருகிறது: பிரதமர் மோடி
40 minutes ago
மதுரையில் சமத்துவ பொங்கல் விழா
2 hour(s) ago | 1
ஜெய்ப்பூர்:'அரசுத் துறைகள் தங்களுடைய அதிகாரத்தை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும்' என, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, மீராகுமார் பேசியதாவது:அரசுத் துறைகள் தங்கள் அதிகாரத்தை மீறி நடக்கக் கூடாது. அதே நேரத்தில், தங்களுக்குரிய அதிகாரத்தை செயல்படுத்தாமலும் இருக்கக் கூடாது. அரசுத் துறைகள் எல்லை மீறி செயல்படும் போது, மற்ற துறைகளை அது பாதிக்கும். இதனால், நாட்டு நலனில் குழப்பம் ஏற்படும். கோர்ட் நடவடிக்கைகள் சில சமயங்களில் வரம்பு மீறுவதாக, மக்கள் பிரதிநிதிகள் கருதுகின்றனர்.
அறுபது ஆண்டுக்கும் மேலான நமது பார்லிமென்ட் நடைமுறைகள், நம் நாட்டின் ஜனநாயகத்தை பறைசாற்றுகின்றன. ஆனால், சபையை நடத்த விடாமல் கூச்சல் செய்வது உள்ளிட்ட உறுப்பினர்களின் நடவடிக்கைகள், பார்லிமென்டின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளன.நம் நாட்டில், கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த கூட்டணி, கொள்கைகளின் அடிப்படையில் தேர்தலுக்கு முன்பாக உருவாக வேண்டும்.இவ்வாறு மீராகுமார் பேசினார்.
40 minutes ago
2 hour(s) ago | 1